401views
வணக்கம்,
அன்றொரு இரவு வேலை தொலைக்காட்சியில் ஒரு திரைப்படம் நடிகர் திலகம் திரு.சிவாஜிகணேசன் அவர்களின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் அவரின் நேர்த்தியான நடிப்போ? அல்லது வேறு என்ன காரணமோ? தெரியவில்லை… அக்கதாபாத்திரத்தின் மீது அப்படி ஒரு ஈர்ப்பு…
யார் அவர்???
எப்படி இப்படி ஒருவர் வாழ்ந்து தன்னுடைய சொத்து சுகபோகங்கள் அனைத்தையும் தன் நாட்டிற்காக தியாகம் செய்து பல இந்தியர்களின் மனதில் சுதந்திர உணர்வை விதைத்தார் என்ற ஆச்சரியம்….
அந்தப் பேரார்வமே அவரைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள அவரின் சுயசரிதையை படிக்கத் தூண்டியது
அவரின் சிறைவாச வாழ்க்கையை மெய்யறம் என்னும் புத்தகம் மூலம் உலகம் அறிய செய்திருந்தார். அதுமட்டுமின்றி தான் ஒரு செல்வந்தனாக பிறந்த போதிலும் பல சுகபோகங்களில் வளர்ந்த போதிலும் கூட தன் நாட்டிற்காக அவை அனைத்தையும் அற்பணித்து தியாகம் என்ற சொல்லிற்கு மறுப்பெயராய் வாழ்ந்து இன்றளவும் பலர் மனதில் நீங்காத இடம் கொண்டு… ஒரு இயக்கியவாதியாக ஒரு முன்னோடியாக ஒரு பெரும்தலைவராக பலர் மனதில் விதைக்கப்பட்டுள்ள அவர்… எனக்கும் ஒரு வழிகாட்டியாக என்னுள்.
மாற்றம் தந்த அவர் கப்பலோட்டிய தமிழர் செக்கிழுத்த செம்மல் ஐயா திரு.வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள்
மா. கோகுல் பொன்ராஜு






