விளையாட்டு

மான்செஸ்டர் யுனைடட் தோற்றதால் மான்செஸ்டர் சிட்டி சாம்பியன்

58views

மான்செஸ்டர் யுனைடட் தோல்வியால், இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து போட்டியில் மான்செஸ்டர் சிட்டி சாம்பியன் பட்டத்தை உறுதி செய்துள்ளது. இங்கிலாந்தின் முக்கிய கால்பந்து போட்டியான இங்கிலீஷ் பிரிமீயர் லீக்கில் 20 அணிகள் களம் கண்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தலா 38 ஆட்டங்களில் விளையாட வேண்டிய நிலையில் இப்போது 35, 36வது சுற்று ஆட்டங்கள் நடக்கின்றன. இந்நிலையில் நேற்று நடந்த போட்டி ஒன்றில் மான்செஸ்டர் யுனைடட்-லெஸ்டர் சிட்டி அணிகள் மோதின. அதில் யுனைடட் அதிரடி காட்டினாலும் லெஸ்டர் தான் 2-1 என்ற கணக்கில் வென்றது. இந்த தோல்வியின் மூலம் மான்செஸ்டர் யுனைடட் சாம்பியன் கனவு கலைந்தது. அந்த அணி இதுவரை 35 ஆட்டங்களில் விளையாடி 70 புள்ளிகளை பெற்றுள்ளது. நேற்றைய ஆட்டத்தில் வென்றிருந்தால் 73 புள்ளிகளுடன் சாம்பியன் வெல்லும் வாய்ப்பில் நீடித்திருக்கும்.
ஆனால் மான்செஸ்டர் யுனைடட் தோற்றதால், முதல் இடத்தில் இருக்கும் மான்செஸ்டர் சிட்டி அணி கோப்பையை தட்டி சென்றுள்ளது. அந்த அணி இதுவரை 35 ஆட்டங்களில் விளையாடி 80 புள்ளிகளுடன் உள்ளது. எனவே 2வது இடத்தில் உள்ள மான்செஸ்டர் யுனைடட், 3வது வது இடத்தில் இருக்கும் லெஸ்டர் சிட்டி ஆகியவை எஞ்சியுள்ள ஆட்டங்களில் வென்றாலும் முதல் இடத்தை பிடிக்கும் வாய்ப்பு இல்லை. அதனால் மான்செஸ்டர் சிட்டி அணி 7வது முறையாக பிரிமீயர் லீக் சாம்பியன் பட்டத்தை பெற உள்ளது. நடப்புத் தொடரின் கடைசி சுற்று ஆட்டங்கள் மே 23ம் தேதி நடைபெறும். நடப்பு சாம்பியன் லிவர்பூல் 6வது இடத்தில் இருக்கிறது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!