ஸ்பெயின் நாட்டில் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியானது ,நடைபெற்று வருகிறது .
களிமண் தரையில் நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் , இறுதிச்சுற்றில் ஆஸ்திரேலிய நம்பர் ஒன் வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி , ஸ்பெயின் நாட்டு வீராங்கனையான பாலா படோசாவுடன் மோதினார். இதில் 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஆஷ்லி பார்ட்டி, பாலா படோசாவை வீழ்த்தி , இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார். எனவே இதன் மூலமாக கடந்த மாதம் சார்லஸ்டோன் டென்னிஸ் போட்டியில், படோசாவிடம் தோல்வி அடைந்ததற்கு, ஆஷ்லி பார்ட்டி பதிலடி கொடுத்துள்ளார். இதுவரை களிமண் தரையில் நடைபெற்ற போட்டியில், தொடர்ச்சியாக ஆஷ்லி பார்ட்டி பெற்றுள்ள ,16 வது வெற்றி இதுவாகும்.
இதைத்தொடர்ந்து ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில், 3வது சுற்று போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் டொமினிக் திம், அலெக்ஸ் டி மினாருடன் மோதி ,7-6 (9-7), 6-4 என்ற நேர் செட் கணக்கில் கால் இறுதிச் சுற்றுக்கு நுழைந்தார். மற்றொரு போட்டியில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரபெல் நடால், ஆஸ்திரேலியா வீரரான அலெக்சி பாப்ரியனை எதிர்கொண்டு , 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் கால்இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார் .
இதைத் தொடர்ந்து தரவரிசையில் 3வது இடத்தில் இருக்கும் , ரஷ்ய வீரரான டேனில் மெட்விடேவ், கிறிஸ்டியன் கேரினிடம் மோதி 4-6, 7-6 (7-2), 1-6 என்ற நேர் செட் கணக்கில், அதிர்ச்சித் தோல்வி அடைந்தார். இதன்பிறகு இரட்டையர் பிரிவில் இந்திய வீரர் ரோகன் போபண்ணா,கனடாவின் டெனிஸ் ஷபோவலோவ் ஜோடி , கொலம்பியாவின் ராபர்ட் பாரா, செபாஸ்டியன் கபால் ஜோடியுடன் மோதி , 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில், கால்இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.