விளையாட்டு

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி நம்பர் ஒன் வீராங்கனை ஆஷ்லி பார்ட்டியை வீழ்த்தி சபலென்கா ‘சாம்பியன்

77views

ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வந்த மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் , சபலென்கா சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார் .

நேற்று முன் தினம் ஸ்பெயின் நாட்டில் களி மண் தரையில் நடைபெற்ற போட்டியில் , பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லி பார்ட்டியும், பெலாரஸ் நாட்டு வீராங்கனையான அரினாசப லென்காவும் மோதிக் கொண்டனர்.

இதில் தொடக்கத்திலிருந்தே அதிரடி காட்டிய சபலென் காமுதல் செட்டில் , ஒரு கேம் கூட இழக்காமல் 6-0 என்ற செட்கணக்கில் வெற்றிபெற்றார். இதனால் ஆஷ்லி பார்ட்டி கடந்த 4 ஆண்டுகளில், ஒரு செட்கணக்கில் ,ஒருகேம் கூடவெற்றி பெறாதது, இதுவே முதல் முறையாகும். இதன் பிறகு நடைபெற்ற 2வது செட்டில் ஆஷ்லி பார்ட்டி கைப்பற்றினார்.

ஆனால்இறுதியில்அதிரடிகாட்டியசபலென்காவின்வேகத்திற்கு, ஆஷ்லி பார்ட்டியால் ஈடு கொடுக்க முடியவில்லை. 1 மணிநேரம் 30 நிமிடங்கள் நடந்த போட்டியில் 6-0, 3-6, 6-4 என்ற செட்கணக்கில்,சபலென்கா சாம்பியன் பட்டத்தை தட்டிசென்றார் .

இந்த வெற்றியின் மூலமாக கடந்த 2 வாரத்திற்கு முன்நடைபெற்ற, ஸ்டட்கர்ட் ஓபன் டென்னிஸ் போட்டியில், சபலென் காதோல்வி அடைந்ததற்கு பதிலடி கொடுத்துள்ளார். அதோடு தொடர்ச்சியாக களி மண்தரையில் 16 போட்டிகளில் வென்ற, ஆஷ்லி பார்ட்டியின் சாதனையும் முறியடித்துள்ளார்.

வெற்றிக்குப் பிறகு சபைக்கும் கூறும் போது, இதற்கு முன் நடைபெற்ற ஸ்டட்கர்ட்  ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில், எனக்குகாயம் ஏற்பட்டதால் மிகவும் அவதிப்பட்டேன். எனவே இந்த மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து, விலகிவிடலாம் என்று நினைத்தேன்.

ஆனால் 4 நாட்களில் அடிபட்ட காயத்திலிருந்து, மிக வேகமாக குணமடைந்ததால் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தி, சாம்பியனாக நிற்கிறேன் என்றும் , இந்த வாரம் எனக்கு மிக வியப்புக்குரிய வாரமாக அமைந்துள்ளதாகவும் ,அவர்கூறினார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!