கவிதை

மழைக்கால பௌர்ணமி

345views

மழைக்கால பௌர்ணமி….
நான்தான் பேரழகி…
என எப்போதும் நிலவிற்கு
தற்பெருமை அதிகம்…
உன்னைப் பார்த்ததும்
குறைத்துக் கொண்டது என்றாய்…

மழையை விட சில்லிப்பு
நீதான் என்றாய் என்னிடம்…

மழையோ வெட்கித்
தலை குனிந்து கொண்டது….
இருவரும் இணைந்து வந்தனர்
என்னிடம் போட்டியிட
#மழைக்கால_பௌர்ணமியாய்…

என்னவளின் பேரழகில்
நீங்கள் இம்மியளவு இல்லை என்றாய்…
அவர்களுக்கு என்ன கோபமோ..
மழையே இப்படி பொழிகிறது…
நிலவும் ஒளிந்து கொண்டது…

உன்னால் இப்போது பார்…
நான்தான் மழை கால இருட்டில்
மாட்டிக் கொண்டேன்….

இப்பொழுதேனும் சொல்லிவிடேன்…
#மழைக்கால_பௌர்ணமி தான் அழகென்று…
வீடு போய் சேர்ந்திடுவேன்
இதமான மழைச்சாரலுடன்…
நிலவின் துணையுடன்….

 

  • சுமதிமணி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!