மலேசியாவின் பிரதமராக இருந்த மகாதீர் முகமது கூட்டணிக் கட்சிகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக திடீரென பதவி விலகினார். இதையடுத்து, உள்துறை அமைச்சராக இருந்த மொகைதின் யாசின் தமது ஆதரவாளர்கள், எதிர்க்கட்சிகளுடன் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கி பிரதமரானார். கூட்டணியில் ஏற்பட்ட நெருக்கடிகள் காரணமாக சில தினங்களுக்கு முன்பு அவரும் பதவி விலகினார். இந்நிலையில், துணைப் பிரதமராக இருந்த இஸ்மாயில் சப்ரி யாகூப்பை பிரதமர் வேட்பாளராக ஏற்க கூட்டணி கட்சிகள் முன்வந்தன.
இஸ்மாயில் யாசினுக்கு நெருக்கடி கொடுத்த அம்னோ, கட்சியின் உதவித் தலைவராகவும் உள்ளார். இதையடுத்து, பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு, மலேசியாவின் 9வது பிரதமராக மன்னர் அப்துல்லா சப்ரி யாகூப்பை தேர்வு செய்தார். இன்று பிற்பகல் அவரது பதவியேற்பு நிகழ்வு நடைபெறுகிறது. இதையடுத்து, சமீப காலமாக மலேசியாவில் நிலவி வந்த அரசியல் குழப்பங்கள், மோதல்களும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.