தொழில்நுட்பம்

“மறந்தும் இதை செய்யாதீர்கள்” : எஸ்பிஐ வங்கி எச்சரிக்கை!

83views

எஸ்பிஐ வங்கி பயனாளர்கள் ஆன்லைன் பரிவர்த்தனை செய்யும் போது விழிப்புடன் இருக்க வேண்டும் என வங்கி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தற்போது ஆன்லைனில் வங்கி சார்ந்த பல்வேறு மோசடிகள் நடக்கின்றன. எனவே எஸ்பிஐ உள்ளிட்ட அனைத்து வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றன. அந்த வகையில் தற்போது எஸ்பிஐ வங்கி ஆன்லைன் மோசடி குறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
டிஜிட்டல் அல்லது ஆன்லைன் பரிவர்த்தனைகளின் போது நிறைய மோசடிகள் நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. அதே நேரத்தில் பல புதிய ஆப்களில் இருந்து தற்காத்துக் கொள்வது முக்கியமானதாக உள்ளது.
இந்நிலையில் , ஆன்லைன் மோசடி செய்பவர்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என எஸ்பிஐ வங்கி அறிவுறுத்தியுள்ளது . முக்கியமான விவரங்களை ஆன்லைனில் பகிர வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளது .
மேலும் அறியப்படாத எந்தவொரு செயலியையும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்று வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது . இது மட்டுமல்லாமல் , அறியப்படாத இணைய பக்கங்களில் இருந்து மொபைல் அல்லது வலை பயன்பாடுகளைப் பதிவிறக்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கூறியுள்ளது .

Right Click & View Source is disabled.

error: Content is protected !!