தமிழகம்

மருத்துவப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு – முதல்முறையாக ஆன்லைனில் கலந்தாய்வு!

41views

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகிறது.

தமிழகத்தில் இளநிலை எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு,அரசு மருத்துவ கல்லூரிகளின் மாநில ஒதுக்கீட்டில் 4349 இடங்கள் உள்ளன.மேலும்,சுயநிதி கல்லூரிகளின் மூலம் கிடைக்கும் இடங்கள் 2650 என மொத்தம் 6999 மருத்துவப் படிப்புக்கான இடங்கள் உள்ளன.

இந்நிலையில்,தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகிறது.அதன்படி,மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று மாலை வெளியிடுகிறார்.

இதனைத் தொடர்ந்து,இந்த இடங்களை நிரப்புவதற்கான மருத்துவ கலந்தாய்வு நடைபெற உள்ளது.அந்த வகையில்,வருகின்ற ஜன.27 ஆம் தேதி மாற்று திறனாளிகள்,விளையாட்டு வீரர்கள் மற்றும் ராணுவ வீரர்களின் வாரிசுகளை உள்ளடக்கிய சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.

அதன்பின்னர்,ஜன.28 மற்றும் ஜன.29 ஆகிய இரண்டு நாட்களில்,அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது.இந்த கலந்தாய்வு கொரோனா கட்டுப்பாடுகளுடன் சமூக இடைவெளியை பின்பற்றி நேரடியாக நடத்தப்படவுள்ளது.

இதனையடுத்து,பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜன.30 ஆம் தேதியில் இருந்து ஆன்லைன் மூலம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.பொறியியல் கலந்தாய்வு போன்று மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெறவுள்ளது இதுவே முதல் முறையாகும்.

மேலும்,பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு அரசு மற்றும் சுய நிதி கல்லூரிகளின் மூலம் ஒதுக்கீடு செய்யப்படவுள்ள இடங்களுக்கும் ஜனவரி 30 ஆம் தேதியில் இருந்து கவுன்சிலிங் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!