உலகம்

மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயம் மனிதருக்கு பொருத்தப்பட்டது- அமெரிக்க டாக்டர்கள் சாதனை

58views

மருத்துவ உலகில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் மிருகங்களின் உறுப்புகளை மனிதர்களுக்கு பொருத்தும் முயற்சியில் டாக்டர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

பன்றியின் இதயம் மனிதர்களின் இதயத்துடன் ஒத்துபோவதாக தெரிவித்துள்ள விஞ்ஞானிகள் அதனை மனிதர்களுக்கு பொருத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால் அவர்கள் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காததை அடுத்து வேறு ஆய்வில் ஈடுபட முடிவு செய்தனர். அதன்படி பன்றியின் இதயத்தை மரபணு மாற்றம் மூலம் மனிதருக்கு ஏற்ப உருவாக்கி அதனை மாற்று அறுவை சிகிச்சை மேற் கொள்வதற்கான சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயத்தை மனிதருக்கு பொருத்தி அமெரிக்க டாக்டர்கள் வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.

அமெரிக்காவை சேர்ந்த 57 வயதான டேவிட் பென்னாட் இதய நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது இருந்தது.

ஆனால் மனித இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு அவரது உடல் நிலை ஒத்துழைக்காது என்பதை அடுத்து மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயத்தை பொருத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கு டேவிட் பென்னட்டும் சம்மதம் தெரிவித்தார்.

இதையடுத்து அவருக்கு மேரிலேண்ட் மருத்துவ பல்கலைக்கழக ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை நடந்தது. சுமார் 8 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சையில் பன்றியின் இதயத்தை நோயாளிக்கு டாக்டர்கள் வெற்றிகரமாக பொருத்தினார்கள். பன்றியின் இதயத்தை அறுவை சிகிச்சை மூலம் பொருத்திக் கொண்ட முதல் நபர் என்ற பெருமையை டேவிட் பென்னட் பெற்றார்.

அவரது உடல் நிலையை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். டேவிட் பென்னட் உடல்நிலை நன்றாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து மேரிலண்ட் மருத்துவ நிபுணர்கள் கூறும் போது, ‘இது ஒரு திருப்புமுனை அறுவை சிகிச்சை ஆகும். உருப்பு பற்றாக்குறைய நெருக்கடியை தீர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். இது எதிர்கால நோயாளிகளுக்கு சாத்தியமான உயிர் காக்கும் முறையை மேம்படுத்த மருத்துவ உலகுக்கு உதவும்’ என்றனர்.

மனித உறுப்புககள் ஏற்றுக் கொள்ளாமல் பன்றியின் உறுப்புகளில் நிராகரித்த 3 மரபணுக்கள் நீக்கம் செய்யப்பட்டு மரபணு மாற்றம் மூலம் மனிதருக்கு பொருந்தக்கூடிய இதயம் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!