செய்திகள்விளையாட்டு

மயங்கி விழுந்த கிறிஸ்டியன் எரிக்சனைக் காப்பாற்றியது எப்படி?- டென்மார்க் டீம் டாக்டர் விளக்கம்

59views

ஆட்டத்தின் 42வது நிமிடத்தில் ஷார்ட் பாஸ் ஒன்றை மேற்கொண்ட டென்மார்க் வீரர் கிறிஸ்டியன் எரிக்சன், திடீரென அப்படியே தரையில் சாய்ந்தார், பேச்சு மூச்சின்றி கிடந்தார். வீரர்களும் களமிறங்கிய மருத்துவக் குழுவும் அவரது மூச்சையும் நாடியையும் மீட்கப் போராடினர்.

கார்டியோ பல்மனரி ரிசுசிடேஷன் என்ற சிபிஆர் சுவாச மீட்பு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக டென்மார்க் அணியின் மருத்துவர் கூறும்போது, கிறிஸ்டியன் எரிக்சனின் பல்ஸ் வீழ்ந்து விட்டது. அவருகு நனவு இல்லை. நான் அவர் அருகில் சென்று பார்த்தப் போது மூச்சு இருந்தது. நாடித்துடிப்பையும் லேசாகக் கண்டேன், ஆனால் உடனடியாகவே அனைத்தும் மாறிவிட்டது. அவர் மூச்சும் நாடித்துடிப்பும் வீழ்ந்து கொண்டிருந்தது.

அப்போதுதான் சுவாச மீட்பு சிபிஆர் சிகிச்சை அளித்தோம். மருத்துவக் குழுவிடமிருந்து உடனடியாக உதவி வந்தது. மற்ற பணியாளர்களின் ஒத்துழைப்புடன் அவருக்கு செய்ய வேண்டிய முதலுதவியைச் செய்தோம். எப்படியோ கிறிஸ்டியன் எரிக்சனை மீட்டு விட்டோம்., என்றார்.

டென்மார்க் பயிற்சியாளர் காஸ்பர் ஹுல்மாண்ட் கூறும்போது, தன் அணி மீண்டும் களமிறங்கி ஆடியதற்காக பெரிய பாராட்டுதல்களை வீரர்களுக்கு வழங்கினார்.

‘நாங்கள் செய்தது உண்மையில் பாராட்டுக்குரியது. ஒவ்வொரு வீரரும் சக வீரர் மீது வைத்திருக்கும் அக்கறையை நினைத்தால் உண்மையில் நெகிழ்ச்சியாக உள்ளது.

கிறிஸ்டியன் எரிக்சன் நினைவு திரும்பும் வரை ஒன்றும் செய்ய முடியாது என்றனர், பிறகு அவர் பிழைத்து விட்டார் என்ற செய்தி வந்தவுடன் களமிறங்கத் தயாராயினர். அதாவது ஒன்று இரவே ஆடிவிட வேண்டும், இல்லையேல் மறுநாள் மதியம் மீண்டும் போட்டியை நடத்த வேண்டும். ஆனால் அனைவரும் இன்றே போட்டியை முடிக்க முடிவு செய்தனர்.

ஆட்டத்தில் தோற்றோம், ஆனால் கிறிஸ்டியன் எரிக்சன் பிழைத்தது, அவரது குடும்பத்தினர் குறித்த கவலை அனைவருக்கும் இருந்தது’ என்றார்.

பெல்ஜியம் வீரர் லுகாகு தன் கோல்களை எரிக்சனுக்கு அர்ப்பணித்தார்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!