இந்தியா

மத்திய பாதுகாப்புப் படைகளின் மேம்பாடு : “ரூ.1523 கோடி ஒதுக்கிய மத்திய அரசு.

64views

எல்லைப் பாதுகாப்புப் படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை, மத்திய தொழில் பாதுகாப்புப் படை, இந்தோ – திபெத்திய எல்லை காவல்படை, தேசிய பாதுகாப்புப் படை ஆகியவற்றை உள்ளடக்கியது தான் சி.ஏ.பி.எஃப் எனப்படும் மத்திய ஆயுத காவல் படை ஆகும் .

இந்த படை வீரர்கள் தான் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல்பாகிஸ்தான், வங்கதேசம், சீனா, மியான்மர், நேபாளம், பூட்டான் ஆகிய அண்டை நாடுகளின் எல்லைப் பகுதிகளிலும் பாதுகாப்பு பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இந்த கடையில் உள்ள வீரர்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு தேவைப்படும் ஆயுதங்களை கொள்முதல் செய்யவும் தொழில்நுட்ப உட் கட்டமைப்பை மேம்படுத்தவும் ரூபாய் 1,523 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒப்புதல் வழங்கியுள்ளார் வழங்கியுள்ளார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!