ஆக்சிஜன் தேவைக்காக மத்திய அரசின் காலிலும் விழத் தயார் என்று மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ்தோபே தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பரவலில் 2வது அலை மிகத் தீவிரமாக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தேசிய அளவில் மகாராஷ்டிரா மாநிலம் அதிகம் பாதிக்கப்பட்டு முதலிடத்தில் உள்ளது. அதேசமயம் சிகிச்சை அளிக்க தேவையான ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்து பற்றாக்குறையால் அம்மாநில அரசு திணறி வருகிறது.
மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக நோயாளிகள் பலரின் உயிரிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆக்சிஜன் தேவைக்காக மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே மத்திய அரசின் காலிலும் விழத் தயார் என உருக்கமாக தெரிவித்துள்ளார்.