தொழில்நுட்பம்

மஞ்சள் நிறத்தில் இனி டாடா டியாகோ காரை பெற முடியாது!! ஏன் தெரியுமா?

65views

டாடா டியாகோ காருக்கு வழங்கப்பட்டு வந்த விக்டரி மஞ்சள் நிறத்தேர்வு எந்தவொரு அறிவிப்புமின்றி நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

சமீபத்தில் தான் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் சப்-4 மீட்டர் ஹேட்ச்பேக் காரான டியாகோவின் டைட்டானிக் நீல நிறத்திற்கு பதிலாக புதிய அரிசோனா நீல நிறத்தேர்வை வழங்கி இருந்தது.

இதன் காரணமாக தீச்சுடரின் சிவப்பு, அரிசோனா நீலம், ப்யூர் சில்வர், முத்தின் வெள்ளை, விக்டரி மஞ்சள் மற்றும் டேடோனா க்ரே என்ற ஆறு விதமான நிறத்தேர்வுகளில் இந்த கார் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இதில் தற்போது விக்டரி மஞ்சள் நிறத்தின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மற்ற ஐந்து நிறங்களில் மட்டும் தான் இந்த டாடா ஹேட்ச்பேக் கார் விற்பனைக்கு கிடைக்கிறது. உலகளாவிய என்சிஏபிசி மோதல் சோதனையில் ஐந்திற்கு நான்கு நட்சத்திரங்களை பெற்ற கார் டாடா டியாகோ ஆகும்.

இதன் மூலம் இந்திய சந்தையில் மிகவும் பாதுக்காப்பான ஹேட்ச்பேக் காராக டியாகோ விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டியாகோவில் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது.

அதிகப்பட்சமாக 85 பிஎச்பி மற்றும் 113 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்த இந்த என்ஜின் உடன் இணைக்கப்படுகின்ற 5-ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் அல்லது 5-ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் என்ஜினின் ஆற்றலை முன் சக்கரங்களுக்கு வழங்க உதவுகிறது.

எக்ஸ்இ, எக்ஸ்டி, எக்ஸ்டிஏ, எக்ஸ்இசட், எக்ஸ்இசட்+, எக்ஸ்இசட்ஏ மற்றும் எக்ஸ்இசட்ஏ+ என்ற 7 விதமான வேரியண்ட்களில் டியாகோ விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் ‘ஏ’-இல் முடிபவை ஆட்டோமேட்டிக் வேரியண்ட்களாகும்.

டாப் வேரியண்ட்களில் கூடுதல் சிறப்பம்சங்களாக 8-ஸ்பீக்கர் & ஆப்பிள் கார்ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ உடன் ஹர்மனின் 7-இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ரியர் பார்க்கிங் கேமிரா, 15 இன்ச்சில் அலாய் சக்கரங்கள், டீஃபாக்கர் உடன் பின்பக்க ஜன்னல்களுக்கும் வைபர், உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

மாருதி சுஸுகியின் பாணியில் பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிமுறைகளினால் டியாகோவின் சிஎன்ஜி வெர்சனை உருவாக்கும் பணியில் டாடா நிறுவனம் ஈடுப்பட்டு வருகிறது. அது மட்டுமில்லாமல் இந்த புதிய வெர்சனினால் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்புண்டு.

இத்தகைய சிறப்புமிக்க காரின் நிறத்தேர்வுகளில் ஒன்றை டாடா நிறுவனம் நிறுத்தி இருப்பதற்கு, அந்த நிறத்தில் டியாகோ அவ்வளவாக விற்பனையாகாது தான் காரணமாக இருக்க வேண்டும். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!