ப்ளோரிடா மாகாணத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் ஒன்று தடீரென இடிந்து விழுந்ததில் மூன்று உயிரிழந்துள்ளனர் மேலும் 99 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
அமெரிக்கா, ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள ஒரு உயரமான அடுக்குமாடி குடியிருப்பின் கட்டடம் திடீரென இடிந்து விழுந்ததுள்ளது. இடிபாடுகளுக்கு இடையெ மூன்று பேர் சிக்கி உயிரிழந்துள்ளதாகவும், இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் ப்ளோரிடா மாகாணத்தின் தீயணைப்பு மீட்பு குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், தற்போது வரை 35 பேரை கட்டிடத்திலிருந்து வெளியேற்றியதாகவும், மேலும் 99 பேரை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
இடிந்தக் கட்டடம் 1918 இல் கட்டப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த கட்டடம் எனவும், கட்டடம் இடிந்த இரவு ஒரு குண்டு வெடித்தது போல் சப்தம் கேட்டது” எனவும் கட்டடத்திற்கு அருகே வசிக்கும் உள்ளூர் வாசிகள் தெரிவித்துள்ளனர். விபத்தில் 18 லத்தீன் அமெரிக்கர்கள், அர்ஜென்டினாவைச் சேர்ந்த ஒன்பது பேரும் உருகுவை நாட்டைச் சேர்ந்த மூன்று பேர், பரகுவை நாட்டைச் சேர்ந்த ஆறு பேர் கட்டடத்திற்குள் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.