இந்தியா

போபால் மருத்துவமனையில் தீ: 4 குழந்தைகள் பலி

68views

ம.பி., மாநிலம் போபாலில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 4 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தன.போபாலில் உள்ள கமலா நேரு குழந்தைகள் சிறப்பு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டது.

மின்சார பிரச்னை காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக மாநில மருத்துவ கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.நேற்று இரவு 9 மணியளவில் ஏற்பட்ட இந்த தீயை அணைக்கும் பணியில் 9 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டன. அந்த வார்டில் சிகிச்சை பெற்ற மற்ற குழந்தைகள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டன. தீவிபத்து ஏற்பட்ட வார்டுக்கு வெளியே பெற்றோர்கள் கண்ணீருடன் காணப்பட்டனர்.இந்த சம்பவத்திற்கு முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இரங்கல் தெரிவித்துள்ளார். தீவிபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளதுடன், உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!