121
வழக்கம் போல ஒரு போலீஸ் கதை. எப்போதும் வழக்கத்தில் இருக்கும் யுக்தியை பின்பற்றி எடுக்கப்பட்டிருக்கும் இலக்கணத்திற்குட்பட்ட அக்மார்க் தமிழ்த்திரைப்படம். .
பிரபுதேவா ஒரு ஐபிஎஸ் ஆஃபீஸர். ஒரு கோல்ட் மெடலிஸ்ட்டும் கூட. MP 55 துப்பாக்கியை மிக சரியாக கையாளத்தெரிந்தவர். ஒரு கட்டத்தில் சட்டத்தை தன்னுடைய சட்டைப்பையில் வைத்திருப்பதுபோல் சர்வ சாதாரணமாக நடந்துகொள்கிறார்.
இதற்கு பிறகு நடப்பது சராசரி போலீஸ் ஸ்டாரிக்கான கிளிஷேக்கள்.
சிறையில் ஒரு பெரியவரை பார்க்கிறார் பிரபுதேவா. அவருடைய பேத்தியை வண்புணர்வு செய்த அக்கியூஸ்டுகளை தண்டிக்க துணிச்சலுடன் முன்வருகிறார். அதை எப்படி எதிர்கொள்கிறார், தண்டனை முறைகளை எப்படி கையாள்கிறார் என்பதை விலாவாரியாக சொல்ல பிரயத்தனம் எடுத்திருக்கிறார் படத்தின் இயக்குனர்.
பிரபுதேவாவின் மனைவியாக நிவேதா பெத்துராஜ்,சுதன்சு பாண்டே மற்றும் சுரேஷ் மேனன் கார்ப்பரேட் வில்லன்களாக வலம் வருகின்றனர். இமான் இசையில் பாடல்கள் கேட்கலாம். கே.ஜி வெங்கடேஷ் ஒளிப்பதிவில்
போலீஸ் படத்திற்கான விறுவிறுப்பு சேர்வது கொஞ்சம் ஆறுதல்.
இயக்குனர் எ சி செல்லப்பன் அடுத்தப்படத்திற்கு தன்னை தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.
பொன் மாணிக்கவேல் – கம்பீரமாக பெயரில் மட்டுமே வலம் வருகிறது.