தமிழகம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு விரைவு பேருந்துகளில் 10 ஆயிரம் பேர் முன்பதிவு: சிறப்பு பேருந்துகள் குறித்து இன்று அறிவிப்பு

50views

பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல அரசு விரைவு, சொகுசுபேருந்துகளில் இதுவரை 10 ஆயிரம் டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

2022 ஜன.14-ம் தேதி வெள்ளிக்கிழமை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பலரும் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். 30 நாட்களுக்கு முன்பு அரசுவிரைவு பேருந்துகளில் டிக்கெட்முன்பதிவு செய்யும் வசதி இருப்பதால், தற்போது ஏராளமானோர் முன்பதிவு செய்து வருகின்றனர்.

இதுபற்றி கேட்டபோது போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:

அரசு விரைவு பேருந்துகளில் பயணம் செய்ய 30 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் வசதிஇருப்பதால், பொங்கலுக்கு முன்கூட்டியே செல்ல விரும்புவோர்தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு, சொகுசு பேருந்துகளில் இணையதளங்கள் மூலம் முன்பதிவு செய்து வருகின்றனர். இதுவரை 10 ஆயிரம் டிக்கெட்கள்பதிவு செய்யப்பட்டுள்ளன.

பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் தலைமையில் சென்னையில் 20-ம் தேதி (இன்று) ஆலோசனை நடக்கிறது.அதன் பிறகு, சிறப்பு பேருந்துகள் பட்டியலை அமைச்சர் வெளியிடுவார்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!