4500 அடி குறுக்களவு கொண்ட சிறு கோள் ஒன்று பூமியை 94,000 கிமீ வேகத்தில் நெருங்கி வருவதாக நாசா கவலை தெரிவித்துள்ளது. 2016ம் ஆண்டு முதல் முதலில் கண்டறியப்பட்ட AJ193 எனும் சிறுகோள் ஒன்று பூமியை நெருங்கி வருவதாக வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர். 4500 அடி குறுக்களவு, 1.4 கிமீ அகலம் கொண்டதாக அந்த சிறுகோள் இருப்பதாகவும் இந்த நிகழ்வை பூமியில் இருந்து தொலைநோக்கி மூலம் கண்காணித்து வருவதாகவும் நாசா தெரிவித்துள்ளது.
இது மணிக்கு சரியாக 94,208 கிமீ வேகத்தில் பூமியை நெருங்குவதாகவும் தெரிவித்தனர். இதனால் பூமிக்கு என்ன விதமான ஆபத்து ஏற்படும் என்பதை கணிக்க இயலாது எனவும் கூறப்படுகிறது. இந்த சிறுகோள் பூமிக்கு சேதாரம் இல்லாமல் கடந்து சென்றுவிட்டால் இத்துடன் அடுத்த 65 ஆண்டுகளுக்கு இந்த கோளினால் பூமிக்கு ஆபத்தில்லை எனவும் கூறுகிறார்கள்.