உலகம்

பூச்சா தாக்குதல்; புடினை போர் குற்றவாளி என விமர்சித்த ஜோ பைடன்

57views

உக்ரைனின் பூச்சா பகுதியில் முன்னதாக ரஷ்ய படையினர் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டதை அடுத்து ரஷ்ய அதிபர் புடினை போர் குற்றவாளி என ஜோ பைடன் விமர்சித்துள்ளார்.

உக்ரைனில் தொடர்ந்து 40 நாட்களுக்கும் மேலாக ரஷ்ய படைகள் ஆயுதப் போர் நடத்தி வருகின்றன. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடி மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

உக்ரைன் தலைநகர் கீவ் நகரின் அருகே உள்ள பூச்சா பகுதியில் ரஷ்யப் படைகள் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக முன்னதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.

இது குறித்து தற்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து தெரிவித்துள்ளார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் போர்க்குற்றவாளி என்று விமர்சித்த ஜோ பைடன் போர்க் குற்றத்திற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஏற்கனவே அமெரிக்கா ரஷ்யாவுக்கு பல்வேறு தடைகளை விதித்து உள்ள நிலையில் பாலியல் வன்புணர்வு, களவு உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ரஷ்ய ராணுவம் ஈடுபட்டதாக கூறப்படுவதால் அமெரிக்கா மேலும் ரஷ்யாவுக்கு பல கட்டுப்பாடுகளை விதிக்கும் என்று ஜோ பைடன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!