விளையாட்டு

புரோ கபடி லீக்: தெலுங்கு டைட்டன்ஸ்- அரியானா ஆட்டம் ‘டை’

52views

12 அணிகள் இடையிலான 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 77-வது லீக் ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின.

இரு அணிகளும் மாறி, மாறி புள்ளிகள் எடுத்ததால் போட்டி பரபரப்பாக நகர்ந்தது. முடிவில் திரில்லிங்கான இந்த ஆட்டம் 39-39 என்ற புள்ளி கணக்கில் டையில் (சமனில்) முடிந்தது. 14-வது ஆட்டத்தில் ஆடிய அரியானா அணி 6 வெற்றி, 5 தோல்வி, 3 டை கண்டுள்ளது. தெலுங்கு டைட்டன்ஸ் ஒரு வெற்றி, 10 தோல்வி, 3 டையுடன் புள்ளிபட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் மும்பை-பெங்களூரு புல்ஸ் (இரவு 7.30 மணி) அணிகள் சந்திக்கின்றன.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!