விளையாட்டு

புரோ கபடி லீக் போட்டியில் ஹரியானா அசத்தல் வெற்றி

43views

புரோ கபடி லீக் போட்டியில் அசத்திய ஹரியானா அணி 46-29 என்ற கணக்கில் பெங்கால் அணியை வீழ்த்தியது.

பெங்களூருவில், புரோ கபடி லீக் (பி.கே.எல்.,) எட்டாவது சீசன் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் ஹரியானா, ‘நடப்பு சாம்பியன்’ பெங்கால் அணிகள் மோதின. துவக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய பெங்கால் அணி, ஒருகட்டத்தில் 11-9 என, முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் எழுச்சி கண்ட ஹரியானா அணியினர், பெங்கால் வீரர்களை ‘ஆல்-அவுட்’ செய்து, 17-15 என முன்னிலை பெற்றது. முதல் பாதி முடிவு 19-19 என, சமநிலையில் இருந்தது.

இரண்டாவது பாதியில் பெங்கால் வீரர்களை இரண்டு முறை ‘ஆல்-அவுட்’ ஹரியானா அணி, ஆட்டநேர முடிவில் 46-29 என வெற்றி பெற்றது. ஹரியானா அணிக்கு விகாஷ் (10 புள்ளி), வினய் (8), ஆஷிஸ் (6) கைகொடுத்தனர். பெங்கால் சார்பில் மணிந்தர் சிங், 13 புள்ளி பெற்றார். ஹரியானா அணி, 16 போட்டியில், 7 வெற்றி, 6 தோல்வி, 3 ‘டை’ என, 48 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது. பெங்கால் அணி, 16 போட்டியில், 7 வெற்றி, 8 தோல்வி, ஒரு ‘டை’ என, 41 புள்ளிகளுடன் 10வது இடத்தில் உள்ளது.

மற்றொரு லீக் போட்டியில் பெங்களூரு, டில்லி அணிகள் மோதின. விறுவிறுப்பான இப்போட்டி ஆட்டநேர முடிவில் 36-36 என்ற கணக்கில் ‘டிரா’ ஆனது.

 

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!