இந்தியாசெய்திகள்

புதுச்சேரியில் ஒரே நாளில் ரூ.7 கோடிக்கு மது விற்பனை!!

55views

புதுச்சேரி மாநிலத்தில் ஒரே நாளில் ரூ. 7 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கின் ஒரு பகுதியாக புதுச்சேரியில் மதுபானக்கடைகள் மூடப்பட்டன. 2ஆவது அலையில் புதுச்சேரி கடுமையாக பாதிக்கப்பட்டதை அடுத்து அம்மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

இந்நிலையில் அங்கு கொரோனா பரவல் குறைய துவங்கியதால், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப் பட்டது. அதன்படி, மதுபானக் கடைகள் உட்பட அனைத்து கடைகளும், காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மதுபான பார்கள் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை . 43 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் மதுபான கடை திறக்கப்பட்டதால் , குடிமகன்கள் வரிசையில் காத்திருந்து மதுபானங்களை வாங்கிச் சென்றனர் .

இதனால் மதுகடைகளில் விற்பனையும் அதிகமாக இருந்தது . வழக்கமாக ஒரு நாளில் , புதுச்சேரி மாநிலம் முழுதும் ரூ . 3 முதல் 4 கோடி வரை மதுபானம் விற்பனையாகும் .

ஆனால் , நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ . 7 கோடிக்கு மதுபானம் விற்பனையானது . 2 ஆம் நாளான நேற்றும் மதுபான கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது .

Right Click & View Source is disabled.

error: Content is protected !!