உலகம்

புதிய வகை வைரசின் பெயர் ”ஒமிக்ரான்” : தடுப்பூசிக்கு கட்டுபடாதாம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

52views

தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய கொரோனா வைரசிற்கு ”ஒமிக்ரான்” என பெயர் சூட்டியுள்ளது உலக சுகாதார அமைப்பு.தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய கொரோனா வைரஸ், ‘டெல்டா’ வகை வைரசை விட மிகவும் மோசமானது’ என, விஞ்ஞானிகள் எச்சரித்து வந்தனர்.

தற்போது தென் ஆப்பிரிக்காவின் போஸ்ட்வானாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஒரு வகை வைரஸ் திடீரென பாதிப்பு, 10 மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கு பி.1.1.529 என்ற புதிய கொரோனா வைரஸ் வகை தான் காரணம் என, விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். இந்த கொரோனா வைரஸ் வகைக்கு உலக சுகாதார நிறுவனம் பெயர் சூட்டாமல் இருந்தது. இந்நிலையில் நேற்று இந்த வகை வைரசிற்கு ”ஒமிக்ரான்” என பெயர் சூட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வைரஸ், தடுப்பூசிக்கு கட்டுப்படாமல் வேகமாக பரவக் கூடியது என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். இதை ‘கவலைக்குரிய வைரஸ் வகை’ என்ற பிரிவில் விஞ்ஞானிகள் சேர்த்துள்ளனர். தென் ஆப்பிரிக்காவில் 6 பேர், போட்ஸ்வானாவில் 3 பேர், ஹாங்காங், இஸ்ரேலில் தலா ஒருவர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். இதர வைரஸ் வகைகளை விட இந்த வைரஸ் வேகமாக பரவும் என்பதுடன், தற்போது புழக்கத்தில் உள்ள தடுப்பூசிக்கு கட்டுப்படாது என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!