நிகழ்வு

புஜைரா தமிழ் சங்கத்தின் பொங்கல் விழா

262views
கடந்த ஞாயிறு 16.01.2022 அன்று காலை 11.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை புஜைரா தமிழ் சங்கத்தின் பொங்கல் விழா சிறப்பாக நடந்து முடிந்தது.
விழாவிற்க்கான அனைத்து ஏற்பாடுகளையும், புஜைரா தமிழ் சங்கத்தின் அட்மின் கமிட்டி உறுப்பினர்கள்
திரு.ராஜேஷ் கண்ணன், திரு.கணேசன், திரு.பீர் முஹமது , திரு.முகுந்தன், திரு.இளவரசன், திருமதி.சுமதி முருகேசன்,
திருமதி.எஸ்தர் கிளமென்ட் சாமி, திருமதி.அபர்ணா பிரசன்னா, திருமதி.சாந்தி ஜெயசீலன், திரு.எபினேசன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
பொங்கல் வைப்பதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் Zero Grocery நிறுவனத்தினர் Sponsor செய்திருந்தனர்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் அனைவரும் PCR Test எடுத்து ஆர்வத்துடன் விழாவில் கலந்து கொண்டனர்.
நோய் தொற்று பரவல் காரணமாக பாதுகாப்பு கருதி PCR டெஸ்ட் ரிசல்ட்  வராத பல குடும்பங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது .
 சிறிய  தூறல்கள் கலந்த மழை சாரலுடன் பொங்கல் விழாவின் தொடக்கமாக அருட்தந்தை சுரேஷ் அவர்களுடன் ஆண்கள் அனைவரும் சேர்ந்து ஒருபுறமும் பெண்கள் அனைவரும் சேர்ந்து மற்றொரு புறமும் வாழை கன்றுகளை நட்டனர்.
கலந்து கொண்ட அனைத்து குடும்பத்தினர்களையும் 6 குழுக்களாக பிரித்து பொங்கல் வைத்தனர்.
குழந்தைகள் அனைவரும் சேர்ந்து தனியாக ஒரு பானையில் பொங்கல் வைத்தது அடுத்த தலைமுறையும் நம் தைத்திருநாளை தொடர்ந்து கொண்டாடுவார்கள் என்ற நம்பிக்கையை தந்தது.
குழந்தைகள் சேர்ந்து பாடிய “பொங்கல் வருது பொங்கல் வருது கொண்டாடலாம் வாங்க ” பாடல் மிக இனிமையாக இருந்தது.
தா- தா கடை சார்பாக அனைவருக்கும் சுவையான Fresh Milk காபி மற்றும் மதியம் வாழைக்காய் வருவலுடன் சுவையான சாம்பார் சாதம் Sponsor செய்திருந்தனர்.
மதியம் முதல் மாலை வரை சிறியவர்கள் மற்றும் பெரியவர்களுக்கான ஒருசில விளையாட்டுகளுடன் விழா இனிதே முடிந்தது.
இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் பார்க்கில் விழா நடத்த அனுமதி கொடுத்த பார்க் நிர்வாகத்திற்கும், கடைசிவரை பெரிய மழை இல்லாமல் விழா நடத்த ஒத்துழைப்பு தந்த இயற்கைக்கும் அனைவரும் நன்றி கூறினர்.
இனி அடுத்த பொங்கல் எப்போ வரும் என்ற எதிர்பார்ப்புடன் அனைவரும் கலைந்து செல்ல மனமில்லாமல் பார்க்கிலிருந்து புறப்பட்டனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!