விளையாட்டு

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியிலும் ஜோகோவிச் பங்கேற்பதில் சிக்கல்

40views

உலகின் முதல் நிலை டென்னிஸ் வீரரான நோவக் ஜோகோவிச் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை. இதனால், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டித்தொடரில் அவரால் பங்கேற்க முடியவில்லை. ஆஸ்திரேலிய அரசு தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டுமே அனுமதிக்க முடியும் கறாராக கூறிவிட்டது. ஜோகோவிச்சின் மேல் முறையீடும் ஆஸ்திரேலிய கோர்ட்டால் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று சொந்த நாட்டுகே திரும்பிச்சென்றார்.

இந்த நிலையில், தடுப்பூசி செலுத்தாத காரணத்தினால் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியிலும் பங்கேற்க முடியாத நிலை ஏற்படும் எனத் தெரிகிறது. பிரான்ஸில் உணவகங்கள், திரையரங்குகள், நீண்ட ரயில் பயணங்கள், விளையாட்டு அரங்குகள் உள்ளிட்ட பொது இடங்களில் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு அனுமதி மறுக்கும் வகையில் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படவுள்ளன.

இதற்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த சட்டம் அனைவருக்கும் பொருந்தும் என பிரான்ஸ் விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால், தடுப்பூசி போட்டுக்கொள்ளாத பட்சத்தில்  ஜோகோவிச் பிரான்ஸ் போட்டியிலும் பங்கேற்கபதில் சிக்கல் எழுந்துள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!