Blood Money (2012) Bollywood Movie Poster
சினிமா

பிரியா பவானி சங்கரின்.. BLOOD MONEY படத்தின் மாஸான ட்ரெய்லர் இதோ..!!!

45views

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வளர்ந்து வரும் பிரியா பவானி சங்கர் அதர்வாவுடன் இணைந்து குருதி ஆட்டம் எஸ்ஜே.

சூர்யாவுடன் இணைந்து பொம்மை மற்றும் அசோக்செல்வனுடன் இணைந்து ஹாஸ்டல் என கதாநாயகியாக நடித்துள்ள திரைப்படங்கள் முடிவடைந்து, விரைவில் அடுத்தடுத்து வரிசையாக ரிலீசாக உள்ளது. அதில் குறிப்பாக இயக்குனர் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலம், சிலம்பரசனின் பத்த தல, சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2, இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் யானை மற்றும் லாரன்சுடன் இணைந்து ருத்ரன் போன்ற திரைப்படங்களில் தற்போது கதாநாயகியாகவும், முக்கிய கதாபாத்திரத்திலும் பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார்.

அதன்பின்னர் எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் மற்றும் நயன்தாராவின் ஐரா படங்களை இயக்கிய இயக்குனர் சர்ஜூன் KM இயக்கத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள புதிய திரைப்படம் பிளட் மணி. இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கருடன் மெட்ரோ பட நடிகர் சிரிஷ் மற்றும் நடிகர் கிஷோர் இணைந்து நடித்துள்ளனர். மேலும் ZEE5 ஒரிஜினல் OTT தளத்தில் வருகிற டிசம்பர் மாதம் 24ஆம் தேதி வெளியாகும் பிளட் மணி திரைப்படத்தை எம்பரர் என்டர்டைன்மென்ட் தயாரிக்க, பாலமுருகன் ஒளிப்பதிவில் சதீஷ் ரகுநாதன் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் பவானி சங்கரின் பிளட் மணி படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!