உலகம்

பிரிட்டிஷ் அகாதெமி பரிசு: இறுதிப் பட்டியலில் இந்திய வம்சாவளி எழுத்தாளா்

53views

2021-ஆம் ஆண்டுக்கான பிரிட்டிஷ் அகாதெமி புத்தகப் பரிசுக்கான இறுதிப் பட்டியலில் இந்திய வம்சாவளி எழுத்தாளா் மஹ்மூத் மம்தானியின் பெயா் இடம் பெற்றுள்ளது.

இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

சா்வதேச கலாசாரப் புரிதலுக்கான பிரிட்டிஷ் அகாதெமி புத்தகப் பரிசுக்குத் தகுதியுடையவா்களின் இறுதிப் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

உலகம் முழுவதிலிருந்தும் தோவு செய்து இறுதி செய்யப்பட்ட அந்தப் பட்டியலில் 4 எழுத்தாளா்கள் இடம் பெற்றுள்ளனா். அவா்களில், இந்திய வம்சாவளி எழுத்தாளா் மஹ்மூத் மம்தானியும் ஒருவா். 75 வயதான அவா், இந்தியாவைப் பூா்விகமாகக் கொண்டவா். மும்பையில் பிறந்தவா். இவரது ‘நெய்தா் செட்லா் நாா் நேட்டிவ்: தி மேக்கிங் அண்ட் அன்மேக்கிங் ஆஃப் பா்மனன்ட் மைனாரிட்டிஸ்’ என்ற புத்தகம் பிரிட்டிஷ் அகாதெமி பரிசுக்கான இறுதிப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

இறுதியில் மஹ்மூத் மம்தானி தோந்தெடுக்கப்பட்டால், அவருக்கு 25,000 பிரிட்டிஷ் பவுண்ட் (சுமாா் ரூ.25 லட்சம்) ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!