சினிமா

பிரபுதேவாவுடன் ஜோடி சேர்ந்த தனுஷ் நாயகி..!

45views

மலையாள லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்ட மஞ்சுவாரியர், அசுரன் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.

மலையாளத்தில் பிரபல நடிகையாக இருந்தாலும், தமிழில் அவருக்கான சரியான கதை அமையாததால், தமிழ் படங்களில் நீண்ட நாட்களாக நடிக்காமல் இருந்தார். வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான அரசுரன் படத்தில் இடம்பிடித்திருந்த மஞ்சுவாரியர் கதாப்பாத்திரம், கதை சொல்லும்போதே அவரை ஈர்த்ததால் படித்தில் நடிக்க சம்மதம் தெரிவித்ததாக கூறினார்.

நாவலை வைத்து படம் எடுக்கப்படுவதாக கூறினாலும், கதாப்பாத்திரத்தை பற்றி அறிந்து கொள்ள அந்த நாவலை படிக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார். மேலும், அசுரன் படத்தில் நடித்ததை பெருமையாக நினைப்பதாகவும் பேட்டி ஒன்றில் கூறினார். இந்நிலையில், மலையாளத்தில் ‘ஆயிஷா’ புதிய படம் ஒன்றில் நடிக்கிறார் மஞ்சுவாரியர். மலையாளம் – அரபு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் அந்தப் படத்தை அமிர் பள்ளிக்கல் என்ற அறிமுக இயக்குநரின் இயக்குநர் இயக்குகிறார்.

இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்கு பிரபுதேவா நடன இயக்குநராக பணியாற்ற உள்ளார். ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் அமைக்கும் அவர், மஞ்சுவாரியருடன் இணைந்து பயிற்சியை தொடங்கியுள்ளார். அவர்கள் இருவரும் ஒன்றாக நடன பயிற்சி மேற்கொள்ளும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இப்போது வெளியாகியிருக்கிறது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!