இந்திய சினிமா உலகில் மூத்த நடன இயக்குனராகவும், நடிகராகவும் திகழ்ந்தவர் சிவசங்கர் மாஸ்டர். இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி கன்னடம், நடன இயக்குனராக பணிபுரிந்து இருக்கிறார்.
அதுமட்டும் இல்லாமல் இவர் 1,300 படங்களில் டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்து உள்ளார். மேலும், ஜாப்பனீஸ் உட்பட 10 மொழிகளில் சிவசங்கர் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றி உள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவசங்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிவசங்கருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிவசங்கருடன் அவரது மனைவி, மூத்த மகன் ஆகியோருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டு அவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனினும் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததால் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிவசங்கரின் சிகிச்சைக்கு சோனு சூட், தனுஷ் உள்ளிட்ட நடிகர்கள் உதவ முந்தனர்.
இந்நிலையில் இன்று (நவ.28) சிவசங்கர் மாஸ்டர் சிகிச்சை பலனின்றி மருத்துவனமையில் காலமானார். அவரது மறைவுக்கு சமூக வலைதளங்களில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.