இந்தியா

பா.ஜ.க.வை பொறுத்தவரை காசி, மதுராவில் கோயில் கட்டுவது தேர்தல் விவகாரங்கள் அல்ல.. உ.பி. துணை முதல்வர் விளக்கம்

60views

பா.ஜ.க.வை பொறுத்தவரை காசி, மதுராவில் கோயில் கட்டுவது தேர்தல் விவகாரங்கள் அல்ல என உத்தர பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா விளக்கம் அளித்துள்ளார்.

உத்தர பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா கடந்த சில தினங்களுக்கு முன் டிவிட்டரில், தற்போது அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோயில் கட்டும் பணியை அரசு தொடங்கியுள்ள நிலையில், காசி மற்றும் மதுரா அடுத்தடுத்த இடங்களில் உள்ளன என்று பதிவு செய்து இருந்தார். அதாவது காசி மற்றும் மதுராவில் கோயில்கள் கட்டப்படும் என்று மறைமுகமாக கூறியிருந்தார்.

இதனையடுத்து கேசவ் பிரசாத் மவுரியாவின் இந்த டிவிட்டை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன. உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக மத உணர்வுகளை இயக்க பா.ஜ.க. மேற்கொண்ட முயற்சி இது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இந்நிலையில், பா.ஜ.க.வை பொறுத்தவரை காசி, மதுராவில் கோயில்கள் கட்டுவது தேர்தல் விவகாரங்கள் அல்ல என்று மவுரியா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கேசவ் பிரசாத் மவுரியா கூறியதாவது: அயோத்தியில் ஒரு பிரமாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. வாரணாசியில் காசி விஸ்வநாத் வழித்தடம் திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்போது மதுராவில் உள்ள கிருஷ்ண ஜென்மபூமியில் கோயில் கட்ட காத்திருக்கிறோம். பா.ஜ.க.வை பொறுத்தவரை இவை (கோயில்கள் கட்டுவது) தேர்தல் விவகாரங்கள் அல்ல. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!