இந்தியா

பாலியல் பலாத்காரத்தின் போது தப்ப முடியாவிட்டால் என்ஜாய் பண்ணுங்க…கர்நாடகாவில் காங்கிரஸ் எம்எல்ஏ சர்ச்சை பேச்சு

66views

‘பலாத்காரம் செய்யும் போது போராடி தப்பிக்க முடியாவிட்டால், அமைதியாக இருந்து அதை அனுபவிக்க வேண்டும்,’ என்று கர்நாடகா காங்கிரஸ் முன்னாள் சபாநாயகரும், எம்எல்ஏ.வுமான ரமேஷ் குமார் பதில் கூறியிருப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கர்நாடகாவில் சட்டப்பேரவை குளிர்கால தொடர் நடந்து வருகிறது. பெலகாவி சட்டப்பேரவை கட்டிடத்தில் இது நடக்கிறது. இதில், கர்நாடகா பாஜ அரசின் பல்வேறு முறைகேடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றன. இது பற்றி பேசுவதற்கு கூடுதல் நேரம் வழங்கும்படி காங்கிரஸ் கோரி வருகிறது. இது தொடர்பாக பேரவையில் நேற்று முன்தினம் சபாநாயகர் விஸ்வேஸ்வர ெஹக்டே காகேரியிடம் காங்கிரஸ் உறுப்பினர்கள் முறையிட்டனர்.

அதற்கு, இவ்வளவு நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று முன்னாள் சபாநாயகரும், காங்கிரஸ் எம்எல்ஏ.வுமான ரமேஷ் குமாரின் பெயரை குறிப்பிட்டு காகேரி கூறினார். இதை கேட்டு எழுந்த ரமேஷ் குமார், ‘உங்களை பார்க்கும்போது பலாத்காரத்துக்கு ஆளானவர் போல் உள்ளது. ஒரு பெண் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகும் போது போராடி தப்பிக்க முடியாவிட்டால். அதை அனுபவிக்க வேண்டும்,’ என்றார். இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில், நேற்று காலை பேரவை கூடியதும் பேசிய ரமேஷ் குமார், ‘யாருடைய மனதையும், பெண்களையும் அவதிமதிக்க வேண்டும், காயப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இப்படி கூறவில்லை.

சபாநாயகராக இருந்து நீங்கள் படும் கஷ்டத்தை பார்த்து, ஆங்கிலத்தில் உள்ள வார்த்தையை கன்னடத்தில் மொழி பெயர்ந்து பேசினேன். அவை தவறுதலாக பார்க்கப்பட்டு விட்டது. எனது பேச்சு மனதை காயப்படுத்தி இருந்தால் என்னை மன்னியுங்கள்.’ என்று கூறினார். இதைத் தொடர்ந்து, இப்பிரச்னையை சபாநாயகர் காகேரி முடித்து வைத்தார்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!