உலகம்

பார்லி., தாக்குதல் வழக்கு; பாக்., ஜனாதிபதி விடுதலை

47views

பார்லி., மீதான தாக்குதல் வழக்கில் இருந்து பாக்., ஜனாதிபதி அல்வி, வெளியுறவுத் துறை அமைச்சர் குரேஷி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர்.நம் அண்டை நாடான பாகிஸ்தான் பார்லி., மீது, 2014ல் தாக்குதல் நடத்தப்பட்டது.

இது தொடர்பாக, பாகிஸ்தான் தெஹ்ரீக் இன்சாப் கட்சியை சேர்ந்தவரும், தற்போது ஜனாதிபதியாக உள்ளவருமான, ஆரிப் அல்வி, வெளியுறவுத் துறை அமைச்சரான ஷா முகமது குரேஷி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கு பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி முகமது அலி வர்ராய்ச், குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார். இதே வழக்கில் கடந்த 2020ம் ஆண்டு அக்டோபரில் பாக்., பிரதமரான இம்ரான் கான் விடுவிக்கப்பட்டார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!