இந்தியா

பாக்., வெற்றியை கொண்டாடினால் உ.பி.,யில் தேச துரோக வழக்கு பாயும்

56views

”இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் பெற்ற வெற்றியை கொண்டாடினால், தேசத் துரோக வழக்கு பாயும்,” என, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரித்துள்ளார்.மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் ‘டி – 20’ உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. சமீபத்தில் நடந்த போட்டியில், இந்தியாவை பாகிஸ்தான் வென்றது. பெரும் சர்ச்சைஇந்த வெற்றியை, ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசம் காஷ்மீரை சேர்ந்த சிலர் கொண்டாடினர்; இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திஉள்ளது.பாக்., வெற்றியை கொண்டாடிய காஷ்மீரைச் சேர்ந்த மருத்துவ மாணவ – மாணவியர் மீது, போலீசார் தேசத் துரோக வழக்கு பதிவு செய்துள்ளனர். முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கும் உத்தர பிரதேசத்திலும், பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடியோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஆக்ரா மாவட்டத்தில் உள்ள பொறியியல் கல்லுாரியில் படிக்கும் காஷ்மீரை சேர்ந்த மூன்று மாணவர்கள், பாக்., வெற்றியை கொண்டாடியதுடன், இந்தியாவுக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பா.ஜ., சார்பில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.மூன்று மாணவர்கள்இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி கல்லுாரியில் பாக்., வெற்றியை கொண்டாடிய மூன்று மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். அவர்களை கல்லுாரி நிர்வாகம் ‘சஸ்பெண்ட்’ செய்தது. இவர்களை தவிர, உ.பி.,யில் பாக்., வெற்றியை கொண்டாடிய பரேலியைச் சேர்ந்த மூவரையும், லக்னோவைச் சேர்ந்த ஒருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், ”கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடுவோர் மீது, தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்படும்,” என்றார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!