உலகம்உலகம்செய்திகள்

பயங்கர கலவரத்திற்கு பிறகு .. ஜேக்கப் ஜூமா ஊழல் வழக்கு மீண்டும் விசாரணை ..!!!

62views

முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா மீதான ஊழல் வழக்குகள் மீண்டும் விசாரணை தொடங்கப்பட்டு உள்ளது

கடந்த 2009 முதல் 2018-ஆம் ஆண்டு வரை தென் ஆப்பிரிக்கா நாட்டின் அதிபராக ஜேக்கப் ஜுமா . பதவி வகித்தார்.இதற்கு முன்னதாக கடந்த 1999 முதல் 2005 ஆம் ஆண்டு வரை துணை அதிபராக இவர் பதவி வகித்த போது ஆயுத கொள்முதல் ஒப்பந்தத்தை உறுதி செய்வதற்காக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தலேஸ் என்ற ஆயுத உற்பத்தி நிறுவனத்திடமிருந்து லஞ்சம் பெற்றுள்ளதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்ததால் கடந்த 2005- ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தபோது அதிபர் தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பாக கடந்த 2009-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அதிபர் ஜேக்கப் ஜூமா மீதான குற்றச்சாட்டுகள் கைவிடப்படுவதாக அரசுத் தரப்பு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். இதன் பிறகு நடந்த அதிபர் தேர்தலிலும் ஜேக்கப் ஜூமா வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் அதிபர் ஜேக்கப் ஜூமா மீதான குற்றச்சாட்டுகளை கைவிடுவதாக அரசு தலைமை வழக்கறிஞரின் தெரிவித்த முடிவு தவறானது என்று கடந்த 2016-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே கடந்த 2018-ஆம் ஆண்டு ஜேக்கப் ஜுமா தனது பதவியை ராஜினாமா செய்த அடுத்த 2 மாதங்களில் இவர் மீது ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து தற்போதைய அதிபரான சிறில் ராமபோசா ஜேக்கப் ஜுமா-க்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டார் .இதையடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஜேக்கப் ஜுமா கைது செய்யப்பட்டு சிறையில் படைக்கப்பட்டபோது பல்வேறு இடங்களில் வன்முறைகள் வெடித்தது.

இந்த வன்முறைக்கு பிறகு மீண்டும் இந்த விசாரணை காணொளி வாயிலாக கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. இதுகுறித்து தற்போதைய அதிபர் சிறில் ராமபோசா கூறும்போது, “சென்ற வாரம் நடந்த வன்முறையிலிருந்து நாடு மீண்டு வருகிறது. அத்துடன் பல ஆண்டுகளாக நடைபெற்ற சுரண்டலில் இருந்தும் நாட்டை மீண்டும் கட்டமைத்து வருகிறோம். மேலும் நாட்டில் பொருளாதாரம் , சமூகத்தை அடிப்படையில் இருந்து மாற்ற வேண்டியது அவசியமாகும். இதைத்தொடர்ந்து வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபடவும் நாட்டில் லட்சக்கணக்கான மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கடந்த வாரம் நடந்த கலவரம் எவ்வளவு ஆழமானவை என்றும் அது நாம் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும் என்பதை நினைவூட்டுகிறது “இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!