உலகம்

பயங்கரவாத நாடா அறிவியுங்க.. உக்ரைன் அதிபர் கோரிக்கை.. இங்கிலாந்து உறுதி..!

33views

உக்ரைன் மீது ரஷ்யா 14 வது நாளாக போர் தொடுத்து வருகிறது. தலைநகர் கீவ் உட்பட நாட்டின் கிழக்கு மற்றும் மத்திய பிராந்தியங்களில் உள்ள நகரங்களில் ரஷ்ய விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது.

இதனால், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 20 லட்சம் பொதுமக்கள் உக்ரைனில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் காணொலி மூலம் உரையாற்றினார். அப்போது அவர், ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதார தடைகளின் அழுத்தத்தை அதிகரித்து அந்நாட்டை பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும் எனவும், உக்ரைனிய மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

ரஷ்ய படைகளை ஆகாயம், கடல், தரை என மூன்று வழிகளிலும் உக்ரைன் ராணுவம் எதிர்கொண்டு வருவதாக கூறிய ஜெலன்ஸ்கி, தங்கள் வான்பரப்பை விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதி என அறிவித்து, உக்ரைன் வான்பரப்பு பாதுகாப்பானது என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

உக்ரைன் அதிபரின் உரையை பாராட்டிய இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், உக்ரைனுக்கு ஆயுத உதவிகள் உட்பட அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என உறுதியளித்தார்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!