Uncategorizedஅறிவிப்பு

நேற்று இன்று நாளை துவக்க விழா

342views
டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் ஐயாவின் 90வது பிறந்தநாள் & அசிஸ்ட்டு உலக சாதனை மையம் நிறுவனத்தின் 10 ஆம் ஆண்டு நிறைவு நாள் முன்னிட்டு நடைபெறும் 2021 + மணிநேர இணையவழித் தொடர் பன்னாட்டுச் சாதனைச் சங்கமம் நிகழ்ச்சியில் நாளை 6ம்தீ இந்திய நேரம் இரவு 11 மணியளவில் நேற்று இன்று நாளை தலைப்பில் உலக அளவில் பல்வேறு துறைகளில் சாதனை செய்த பல்வேறு சாதனையாளர்களை தேர்ந்தெடுத்து அவர்களை நேர்முகம் கானும் நிகழ்வு நடைபெற இருக்கின்றது. இதில் இன்று Brainobrain International MD கின்னஸ் விருது பெற்ற ஆனந்த் சுப்பிரமணியன் (ஆளுமைசார் பயிற்சி பயிலகம்), சர்வதேச மராத்தான் விருது பெற்ற ஓட்டப்பந்தய வீரர் செய்யது அலி, சிறந்த பெண் பொறியாளர் விருது பெற்ற திருமதி சுபத்ரா இராஜேந்திரன், சிறந்த விஞ்ஞானி விருது பெற்ற திருமதி மாஷா நஜிம் உள்பட பல்வேறு ஆளுமைகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்

இந்த 2021 + மணிநேர இணையவழித் தொடர் பன்னாட்டுச் சாதனைச் சங்கமம் தொடக்க விழா நிகழ்வு புதுச்சேரியில் ரெசிடென்சி டவர்ஸில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. துவக்க விழாவில் கலைமாமணி முனைவர் வி.ஜி. சந்தோஷம் ஐயா அவர்கள்.முன்னாள் ஜனாதிபதி மறைந்த அப்துல் கலாம் ஐயா அவர்களின் பேரன் ஷேக் சலீம் ..துபாயிலிருந்து முனைவர். ஆ.முகமது முகைதீன்… சிங்கப்பூரிலிருந்து ஷர்மிளா நாகராஜன்.. புதுவைத் தமிழ்ச்சங்க தலைவர் முனைவர்.முத்து… கடலூர் CKகல்லூரி டிரஸ்டீ CK.அசோக்குமார்.. அசிஸ்ட் உலகசாதனை நிறுவனர் முனைவர்.இரா. ராஜேந்திரன்…சென் அகாடமி கவிதா,கவிதை வானில் கலாவிசு, ரோஷனாரா பானு, கவிஞர் ஹிதாயத்துல்லாஹா, திரு பழனி, திரு.ரமணி, திரைப்படத்துறை சார்ந்த திரு எட்வின், இசையமைப்பாளர் தேவ் குரு என பல ஆளுமையாளர்களும் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர். தமிழ்நாடு ஆசிரியர் கல்வியல் பல்கலைக்கழக துணைவேந்தர் மான்பமைமிக்க பேராசிரியர் பஞ்சநதம் ஐயா அவர்களும் அவர்களது குழுவினர் அனைவரும் இணைய வழியில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.இவ்வாறாக, அரசியல் பிரமுகர்கள், திரை ஆளுமைகள், சமூக ஆர்வலர்கள், தமிழ்ச் சான்றோர்கள், தொழிலதிபர்கள், கல்வியாளர்கள், ஆசிரியப் பெருமக்கள், மாணவர்கள், இல்லத்தரசிகள் உட்பட பலரும் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.

அசிஸ்ட்டு உலக சாதனை மையத்துடன் முனைவர் சிவசக்தி இராமஜம்மாள் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், முனைவர் ஆ.முகமது முகைதீன் நிறுவனரான விளங்கும் கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளை, முனைவர் இரா.கவிதா செந்தில்நாதன் இயக்குனராகத் திகழும் ஆளுமைசார் பயிற்சிப் பயிலகமான தி சென் அகாடமி, கவிதாயினி கலாவிசு தலைவராக விளங்கும் கவிதை வானில் கவி மன்றம், கனடாவில் உள்ள சர்வதேச பெண்கள் கூட்டமைப்பின் நிறுவனர் திருமதி இராஜி பாற்றரசன், சிங்கப்பூர் சர்வதேச வர்த்தக மற்றும் கலாச்சார பேரவையின் முனைவர் ஷர்மிளா நாகராஜன், திரு ஆனந்த் சுப்பிரமணியன் அவர்களின் பிரையன் ஓ பிரையன் என அனைத்து அமைப்புகளும் ஒன்று சேர்ந்து 10 நாட்கள் நிறைவுறும் தருவாயில் பல்லோர் கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.

துவக்க விழா ஒரு மணிக்கு நிறைவடைய உடனே முதல் நிகழ்வாக ஆரம்பமானது கவிதாயினி கலாவிசு அவர்களின் கவிதை வானில் கவி மன்றத்தின் நிகழ்வு நடைபெற்றது. இதுவரை கவிதை வானில் கவி மன்றத்தின் சார்பில் 70 மணி நேரத்திற்கும் மேலாக 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பல்சுவை நிகழ்வுகளை வழங்கிய வண்ணம் உள்ளனர்.

முனைவர் இரா. கவிதா செந்தில்நாதன் இயக்குநராகப் பொறுப்பு வகிக்கும் புதுவை ஆளுமைசார் பயிற்சிப் பயிலகமான தி சென் அகாடமி 20 ஒருங்கினைப்பாளர்களைக் கொண்டு 20க்கும் மேற்பட்ட நிகழ்வுகளை 156 மணி நேரத்திற்கும் மேலாக 850 நபர்களுக்கும் அதிகமான பங்கேற்பாளர்களைக் கொண்டு சாதனை புரிந்து வருகின்றது.

தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகம் சார்பாக முனைவர் சிவசக்தி இராஜம்மாள் மற்றும் முனைவர் பிரேமலதா அவர்களது ஒருங்கிணைப்பில் வெகு சிறப்பாக பற்பல கல்வி நிறுவனங்களை ஒன்றிணைத்து தன் நிகழ்வுகளை 105 மணிநேரத்திற்கு மேலாக 1150 பங்கேற்பாளர்களைக் கொண்டு தொடர்ந்து சிறப்புற அளித்து வருகிறார்கள்.
கனடாவிலுள்ள பன்னாட்டு பெண்கள் பாதுகாப்பு அமைப்பைச் சார்ந்த திருமதி இராஜி பாற்றரசன் இது நாள் வரை உலகெங்கும் உள்ள 77 தமிழ் அமைப்புகளை ஒண்றினைத்து 90 பட்டிமன்றங்கள் 25 சிறப்பு நிகழ்வுகள் நடத்தி 650 பங்கேற்பாளர்களைப் பங்குபெறச் செய்துள்ளார்.

சிங்கப்பூர் முனைவர் ஷர்மிளா நாகராஜன் தலைவராகப் பொறுப்பு வகித்து வரும் உலக வர்த்தகம் மற்றும் கலாச்சார அமைப்புப் பேரவை மூன்று நாட்களில் மட்டும் 10 மணிநேரத்தில் ஐந்து சிறப்பு நிகழ்வுகளை நடத்தி மாபெரும் சிறப்பினை தமிழ் மொழிக்கும் தமிழர்களுக்கும் சேர்த்துள்ளது.
இவ்வமைப்புகளையெல்லாம் ஒன்றிணைத்து செயலாற்றி வரும் முனைவர் ஆ. முகமது முகைதீன் நிறுவனராகப் பொறுப்பு வகிக்கும் தேசியக் கல்வி அறக்கட்டளை 16 மணிநேரங்களில் 4 சிறப்பு நிகழ்வுகளின் வழி 30 நபர்களைப் பங்கேற்க வைத்துள்ளது. மேலும், இவர்கள் நடத்திய 3 நிகழ்வுகள் உலக சாதனைகளாக அங்கிகரிக்கப்பட்டு இந்தியன் ப்ரைடு ஆப் புக்ஸ்ஸில் இடம்பெற்றுள்ளது.
ஏறத்தாழ உலகெங்கும் 10,000 நபர்களுக்கும் மேலாக பார்வையாளர்கள் இணையத்தளத்திலும் சமூக ஊடகங்களின் வழியும் வருகைப்புரிந்து ஊக்கத்தையும் ஆக்கத்தையும் அளித்து வருகின்றனர்.
இவ்வாறாக, ஏழு அமைப்புகளும் சேர்ந்து கடந்த 11 நாட்களில் 500 மணிநேரத்திற்கும் மேலாக பலவிதமான நிகழ்வுகளாக வழங்கும் இச்சூழலில் 3000 நபர்களுக்கும் மேலாக பங்கேற்றுள்ளனர் என்பதை மிக்க மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
அசிஸ்ட்டு உலக சாதனை மையம் 10 நபர்கள் உள்ளடங்கிய ஒரு குழுவினை அமைத்து அனைத்து நிகழ்வுகளையும் கண்காணித்து சாதனை நிகழ்வுகளை அங்கிகரித்து வருகின்றார் இந்நிறுவனத்தின் தலைவர் முனைவர் இராஜேந்திரன்.

எங்களுக்கு உறுதுணையாக நிற்கும் சமூக ஊடகப் பங்கேற்பாளர்கள், தமிழ் அமெரிக்கா, தமெரிக்கா, கல்விச் சோலை தொலைகாட்சி, மயூரி, அகவல் பன்னாட்டு மின்னிதழ், நான் FM மற்றும் மாத இதழ் நிறுவனத்தாருக்கும் மற்றும் துபாய் ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத் அவர்களுக்கும் எமது நன்றிகளும் வணக்கங்களும் !
எங்களுக்கு பல வகையில் உதவி புரிந்திடும் பேராசிரியர் முனைவர் தி பிரேமலதா, கவிஞர் கீதா ஸ்ரீராம், கவிஞர் உமர் பாரூக், மஸ்கட் முனைவர் கவிஞர் பஷீர் ஆகியோர்ககளும் இனணந்து செயலாற்றுகின்றனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!