சினிமா

நெல்சன் பற்றி டிடி போட்ட ஒரே ஒரு ட்வீட் .. உற்சாகத்தில் ரசிகர்கள்

59views

யூட்யூப்பை திறந்தாலே “தலைவர் 169” தான்! எந்த விதமான முன்னறிவிப்பும் இல்லாமல், மிகவும் சர்ப்ரைஸ் ஆன முறையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு வீடியோ ஒன்று, சன் டிவி யூடியூப் சேனலில் நேற்று வெளியானது.

பொழுது போகாமல் யூடியூப்பை நோண்டிக் கொண்டிருந்த பல சினிமா ரசிகர்களுக்கு “தலைவர் 169 ” வீடியோவானது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. குறிப்பாக தளபதி விஜய் ரசிகர்களுக்கு ஏனெனில் தலைவர் 169 ப்ரொஜெக்ட்டை இயக்கப்போவது வேறு யாருமில்லை, பீஸ்ட் படத்தை இயக்கியுள்ள நம்ம நெல்சன் திலீப்குமார் தான்.

ஆகாயத்திற்கும் பூமிக்கும் குதித்த விஜய் ரசிகர்கள் ஒருபக்கம் இருக்க , மறுகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்கள் பிரமிப்பில் விண்வெளிக்கே சென்று விட்டனர் என்று கூறலாம். ஏனெனில் வெளியான வீடியோவில் ரஜினிகாந்தின் ஸ்டைலும், லுக்கும், சிரிப்பும், ஸ்க்ரீன் ப்ரெசன்ஸும் அப்படி!

டாக்டர், பீஸ்ட் திரைப்படங்களை தொடந்து தலைவர் 169-க்கும் நெல்சன் திலீப்குமார் தனது ஆஸ்தான இசை அமைப்பாளரான அனிருத்தை தேர்வு செய்துள்ளார். “தலைவர் 169 அனௌன்ஸ்மென்ட்” வீடியோவின் ஆரம்பமே தாறு மாறான பேக்கிரவுண்ட் மியூசிக் உடன் அனிருத்தின் முகம் காட்டப்படுகிறது, அவரின் அருகில் இயக்குனர் நெல்சன் நிற்கிறார்.

பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் எதாவது ஒரு லேட்டஸ்ட் போட்டோவை காட்டி அனௌன்ஸ்மென்ட்டை முடித்து விடுவார்கள் என்று பார்த்தால்.. கையில் கூலிங் கிளாஸ் உடன் ஸ்டைலாக, மாஸ் ஆக ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்கிறார் ரஜினி. அவர் முகத்தின் மீது வெளிச்சம் பாய்ச்சப்பட்டதும் – சிரிக்கிறார், பின் ஸ்டைல் ஆக கால் மேல் கால் போட்டு அமர்கிறார். ரஜினியின் இந்த அழகை பார்க்க அவரின் ரசிகர்கள் திரும்ப திரும்ப “தலைவர் 169 ” வீடியோவை பார்த்த வண்ணம், ஷேர் செய்த வண்ணம் வருகின்றனர்

அந்த ரசிகர் பட்டாளத்தில் விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி டிடி-யும் அடங்குவார். “தலைவர் 169 ” வீடியோவை பார்த்த டிடி நீலகண்டன், தனது டிவிட்டர் அக்கவுண்டில் எமோஷனல் போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் “என்னால அழுகைய அடக்கவே முடியலடா நெல்சா” என்று குறிப்பிட்டு நெல்சனை டேக் செய்துள்ளார். பின் “தலைவர் சிங்கம் மாதிரி இருக்காரு டா..” என்று குறிப்பிட்டு “தேங்க் யூ சார்” என்று சொல்லி ரஜினியையும் டேக் செய்துள்ளார்.

பின் “வெறி பிஜிஎம்” என்று குறிப்பிட்டு அனிருத்தையும் டேக் செய்துள்ளார். கடைசியாக “போங்கப்பா ரொம்ப ஹேப்பி” என்று அந்த ட்வீட்டை முடித்து, டிவி ஒன்றில் தலைவர் 169 ” வீடியோவை பார்க்கும் வீடியோவையும் டிடி ஷேர் செய்துள்ளார். என்னப்பா டிடி, நெல்சனை வாடா போடானு சொல்லி பேசுறாங்க என்று ஷாக் ஆக வேண்டாம். அறியாதோருர்களுக்கு, இயக்குனர் நெல்சன் திலீப்குமார் மற்றும் டிடி ஆகிய இருவரும் விஜய் டிவியில் ஒன்றாக பணிபுரிந்தவர்கள்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!