தமிழகம்

நீட் மசோதா பிப்.,5-ல் அனைத்து கட்சி கூட்டம் : முதல்வர் அறிவிப்பு

39views

நீட் விலக்கு மசோதாவை தமிழக கவர்னர் திருப்பி அனுப்பியதை அடுத்து அனைத்து கட்சி கூட்டம் வரும் பிப்.,5-ம் தேதி நடைபெற உள்ளது.

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து இருப்பதாவது: நீட் விலக்கு மசோதா குறித்து கவர்னர் தெரிவித்துள்ள கருத்துக்கள் தமிழக மக்களால் ஏற்கத்தக்கதல்ல. நீட் விலக்கு மசோதாவை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்ற அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும். கவர்னரின் கருத்துக்கள் ஆராயப்பட்டு நீட்தேர்வு பற்றிய உண்மை நிலை அனைவருக்கும் தெளிவாக விளக்கப்படும். நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் அனைவரிடமும் கருத்தொற்றுமை நிலவி வருகிறது.

நீட்விலக்கு மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பியநிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆராய பிப். 05 தேதி காலை 11 மணிக்கு அனைத்துகட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறும். சட்டத்திற்கு அடிப்படையான கூற்றுக்கள் தவறானவை என கவர்னர் தெரிவித்துள்ள கருத்துகள் ஏற்கத்தக்கதல்ல. இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே நீட் விலக்கு மசோதா தொடர்பாக அனைத்து கட்சிகூட்டத்திற்கு அழைப்பு விடுத்து முதல்வர் ஸ்டாலின் அனைத்து கட்சித்தலைவர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

இதில் பா.ஜ., பங்கேற்காது அக்கட்சி எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!