உலகம்

நிலவில் மோதும் ராக்கெட் “எங்களுடையது அல்ல” : சீனா தகவல்

46views

வரும் மார்ச் 4-ஆம் தேதி நிலவில் ராக்கெட் மோத உள்ளதாக நாசா சில வாரங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டது. இந்த ராக்கெட்டானது அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் என்றும், கடந்த 2015-ல் ஏவப்பட்ட இந்த ராக்கெட்  கடந்த 7 ஆண்டுகளாக விண்வெளியில்  குழப்பமான பாதையில் ஆபத்தான முறையில் சுற்றி வருவதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில், மார்ச் 4-ல் நிலவில் மோதும் ராக்கெட் ஸ்பேஸ் எக்ஸ்-ன் ராக்கெட் இல்லை என்றும், இது சீன விண்வெளி ஆய்வு மையத்தால் சந்திர ஆய்வுத் திட்டத்தின் ஒரு பகுதியாக 2014 இல் ஏவப்பட்ட சாங்கி 5-டி1- விண்கலத்திற்கான பூஸ்டர் என்றும் விண்வெளி ஆய்வாளர்களால் நம்பப்படுகிறது.

ஆனால் இதை சீனா மறுக்கிறது. இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளார் வாங் வென்பின் கூறும்போது, “விண்வெளி ஆய்வாளர்கள் கூறிவரும் சாங்கி 5-டி1- விண்கலத்திற்கான பூஸ்டர் அப்போதே பாதுகாப்பாக பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்து முற்றிலும் எரிந்து விட்டது. சீனா, தனது விண்வெளி நடவடிக்கைகளை மனசாட்சிப்படி  நீண்டகாலமாக செய்துவருகிறது. நிலவில் மோதும் ராக்கெட் எங்களுடையது கிடையாது”. இவ்வாறு அவர் கூறினார்.

ராக்கெட் யாருடையதாக இருந்தாலும், அது மார்ச் 4-ஆம் தேதி நிலவின் பின்பகுதியில் மோதுவது உறுதியாகியுள்ளது. இந்த மோதலினால், பூமிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!