இந்தியா

‘நிதி ஆயோக்’ சுகாதாரத்தில் சிறந்த மாநிலங்கள் பட்டியல்: கேரளம், தமிழ்நாடு முதல் 2 இடம்; உத்தர பிரதேசம் கடைசி இடம்

50views

சிறந்த சுகாதார வசதியுடைய மாநிலங்கள் பட்டியலில் யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ள உத்தர பிரதேசம் கடைசி இடத்தில் உள்ளது.

2019-2020 ஆண்டில் ஒட்டுமொத்த சுகாதார செயல்பாட்டில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்களை தரவரிசைப்படுத்தி, இந்திய அரசின் ‘நிதி ஆயோக்’ அமைப்பு பட்டியல் தயாரித்துள்ளது.

சுகாதார செயல்பாட்டின் முக்கிய அம்சங்கள் அடங்கிய 24 அளவுகோல்கள் அடிப்படையில் 4-வது ஆண்டாக இப்பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகத்துடன் இணைந்தும், உலக வங்கியின் தொழில்நுட்ப உதவியுடனும் பட்டியல் தயாராகி உள்ளது.

இந்த பட்டியலில், பெரிய மாநிலங்களிடையே ஒட்டுமொத்த சிறப்பான செயல்பாட்டில், தொடர்ந்து 4-வது ஆண்டாக கேரளம் முதல் இடத்தில் இருக்கிறது. தமிழ்நாடு 2-வது இடத்தில் இருக்கிறது. தெலங்கானா மாநிலம் 3-வது இடத்தில் உள்ளது.

ஆனால், 2018-2019 ஆண்டில் இருந்து சுகாதார செயல்பாட்டை அதிகரித்தவகையில் பெரிய மாநிலங்களிடையே கேரளம் 12-வது இடத்துக்கும், தமிழ்நாடு 8-வது இடத்துக்கும் தள்ளப்பட்டுள்ளன.

இந்த பட்டியலில் பெரிய மாநிலமான உத்தர பிரதேசம் கடைசி இடத்தை பிடித்துள்ளது. பிகார், மத்திய பிரதேசம் ஆகியவை கடைசிக்கு முந்தைய 2 இடங்களில் உள்ளன.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!