சினிமா

“நான் இசையமைத்த பாடல்கள் எதுவுமே எனக்கு நெருக்கமானது இல்லை; நான் மறந்துடுவேன்” – ஹாரிஸ் ஜெயராஜ்

244views

இளைஞர்கள் கொண்டாடும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். காதல் வயப்பட்ட எவரும் இவரின் மெலோடியை கடந்து வரமால் இருந்திருக்க முடியாது.

மின்னலே திரைப்படம் மூலம் கோலிவுட்டில் எண்ட்ரி கொடுத்த ஹாரிஸ் இசையமைத்து அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட்தான். ஹாரிஸ் இசையமைத்த பாடல்களில் பிடித்த பாடல்களை எல்லாம் ஒரு ஆல்பமாக போட வேண்டும் என நினைத்தால் , யோசிக்கவே தேவையில்லை அவர் இசையமைத்த அனைத்து பாடல்களுமே ஆல்பத்தை நிறைத்துவிடும். ஹாரிஸ் ஜெயராஜ் தான் இசையமைக்கும் விதம் குறித்து நேர்காணல் ஒன்றில் பகிர்ந்திருக்கிறார்.

அதில் “நான் சின்ன வயசுல இருந்தே பாடல்கள்னா அதோட வரிகளை பார்த்து ரசித்தது கிடையாது. விவரம் தெரிந்த பிறகு, குறிப்பாக இசையமைப்பாளராக மாறிய பிறகுதான் எனக்கு தெரிந்தது. நல்ல நல்ல பாடலாசிரியர்களுடன் வேலை செய்யும் பொழுது எவ்வளவு மெனக்கெடல்கள் இருக்குனு புரிய ஆரமித்தது. அதன் பிறகு அதை பேப்பர்ல பார்க்கும் பொழுது இன்னும் ரசிக்க ஆரம்பித்துவிட்டேன். அதனாலதான் என்னுடைய இசையமைப்பில் வெளியாகும் பாடல்களில் வரிகள் தனியாக தெரியும். தாமரை ரொம்ப ரசித்து செய்வாங்க. ஒரு நேரத்துல ஒரு பாடல் மட்டும்தான் எழுதுவாங்க. கடின உழைப்பாளி அவங்க. நான் நிறைய பாடல்கள் பண்ணுவது இல்லை. காரணம் என்னுடைய வேலை பளுவை குறைத்துக்கொண்டு, இன்னும் ஈடுபாட்டோடு கவனம் செலுத்துவேன்.

கதை நல்லா இருக்கானு பார்க்க மாட்டேன். எனக்கு நான் இசையில என்ன மாதிரி ஸ்கோப் இருக்கு படத்துலனுதான் பார்ப்பேன். நான் ஒரு படத்திற்கு இசையமைத்த பிறகு அந்த படத்தை திரும்ப திரும்ப பார்க்க மாட்டேன். ரிலீஸாகும் சமயத்தில் ரசிகர்களின் எண்ணம் எப்படி இருக்கு என்பதற்காக படங்கள் பார்ப்பேன். ஆனால் மீண்டும் பார்க்க மாட்டேன். இயக்குநர் ஜீவா மறைவு கோலிவுட் சினிமாவில் மிகப்பெரிய வெற்றிடம் . தாம் தூம் திரைப்படம்தான் அவரின் இறுதி படம் . அந்த படத்துல இடம்பெற்ற அன்பே என் என்பே பாடல் அவர் இல்லாமத்தான் இசையமைத்தேன். நான் இசையமைத்த பாடல்கள் எதுவுமே எனக்கு நெருக்கமானது இல்லை. நான் மறந்துடுவேன்’ என வெளிப்படையாக பேசியுள்ளார் ஹாரிஸ் ஜெயராஜ் .

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!