447views
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் ‘நானே வருவேன்’. இந்த திரைப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் நாயகியாக இந்துஜா நடிக்கிறார். சமீபத்தில் இதன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில், புதிய போஸ்டரை இயக்குனர் செல்வராகவன் வெளியிட்டு, இறுதி கட்ட படப்பிடிப்பு நடந்து வருவதாக அறிவித்து இருக்கிறார். இந்த புதிய போஸ்டர் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.