அறிவிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஆர் எஸ் பாரதிக்கு அபுதாபியில் வரவேற்பு

191views
தாயகத்திலிருந்து அமீரகம் வருகை புரிந்திருக்கும் திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு ஆர் எஸ் பாரதி அவர்களுக்கு, இன்று 04/12/2021, சனிக்கிழமையன்று அமீரகத் தலை நகர் அபுதாபியில் அமைந்திருக்கும் இந்திய கலாச்சார மையத்தில் வைத்து வரவேற்பளிக்கப்பட்டது.
அச்சமயம் ஆர்.எஸ் பாரதி அவர்களை, அய்மான் சங்கத் தலைவர் கீழை ஜமாலுத்தீன், அய்மான் பைத்துல்மால் தலைவர் அதிரை ஷாஹுல் ஹமீது, அய்மான் சங்கப் பொருளாளர் லால்பேட்டை மௌலவி அப்பாஸ் மிஸ்பாஹி, அய்மான் பைத்துல் மால் செயலாளர் பார்த்திபனூர் நிஜாம் ஆகியோர் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தனர்.
இச்சந்திப்பின் போது, அய்மான் சங்கத் தலைவர் கீழை ஜமாலுத்தீன் மற்றும் அய்மான் பைத்துல் மால் தலைவர் அதிரை ஷாஹுல் ஹமீது ஆகியோர் திரு. ஆர்.எஸ் பாரதி அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!