சினிமா

நவரசாவில் நடந்தது என்ன? – பொன்ராம் விளக்கம்

80views

மணிரத்னம் தயாரிப்பில் ஓடிடியில் வெளியான இணைய தொடர் நவரசா.ஒன்பது ரசங்களை குறிக்கும் வகையில் ஒன்பது பேர் ஒன்பது கதைகளை இயக்கியிருந்தனர்.

இதில் பணியாற்றிய அனைவரும் ஊதியம் வாங்காமல் வேலை பார்த்தனர். படத்தின் மூலம் கிடைத்த பணம் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 12,000 திரைப்பட தொழிலாளர்களுக்கு ஆறு மாதங்கள் தவணை முறையில் அளிக்கப்பட்டது. இந்த ஆந்தாலஜியில் நகைச்சுவை ரசத்துக்கான கதையை பொன்ராம் இயக்கினார். கவுதம் கார்த்திக் முக்கிய வேடத்தில் நடித்தார்.

இறுதியில் பொன்ராம் படத்தை நீக்கிவிட்டு ப்ரியதர்ஷன் இயக்கிய படம் இடம்பெற்றது. இது பொன்ராம் மற்றும் அதில் பணியாற்றியவர்களுக்கு கடும் ஏமாற்றமாக அமைந்தது. பொன்ராமின் படம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியாமலிருந்தது. இந்நிலையில், சமீபத்தில் பேட்டியளித்த பொன்ராம், “ஆடியோவில் பிரச்னை இருந்ததால் நான் இயக்கிய படத்தை தேர்வு செய்யவில்லை என்றார் மணிரத்னம்.

அவரது விளக்கம் எனக்கு திருப்திகரமாக இல்லை. இன்றுவரை என்னுடைய படம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் என்ககு தெரியாது. அனைவரும் அந்தப் படத்துக்காக உண்மையாக உழைத்தோம். ஆனால், கடைசியில் மனமுடைந்து போனோம் ” என்று கூறியுள்ளார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!