சினிமா

நயன்தாரா நடிப்பில் உருவாகும் ஜென்டில்மேன் பார்ட் 2..? ரசிகர்கள் உற்சாகம்..!

61views

இந்திய திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவர் ஷங்கர். இவர் இயக்கிய அனைத்து படங்களும் மாபெரும் வெற்றி பெற்றவை.

அவரது முதல் படமான ஜென்டில்மேன் ஒரு மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இயக்குனர் ஷங்கர் யார் என்று திரும்பி பார்க்க வைத்த படமாகவும் அது அமைந்தது.

இந்த நிலையில், 1993ம் ஆண்டு வெளியான ஜென்டில்மேன் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 29 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகும் இந்த படத்திற்கு நயன்தாரா நாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!