நடுத்தெருவுக்கு வந்த உலகின் மிகப்பெரும் பணக்காரர் – இருந்த ஒரே கடைசி வீட்டையும் விற்றார்..
உலக பெரும் பணக்காரர்களுள் ஒருவராக விளங்கும் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தனது கடைசி வீட்டையும் ஏலத்திற்கு கொண்டுவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எலான் மஸ்க்கிற்கு கலிஃபோர்னியாவில் மாளிகை ஒன்று கிரிஸ்டல் ஸ்பிரிங்க்ஸ் சாலையில் உள்ளது.
இதன் மதிப்பு கிட்டத்தட்ட 37.5 மில்லியனாகும். கடந்த ஆண்டில் தனது உடமைகள் அனைத்தில் இருந்தும் விடுப்பட உள்ளதாக எலான் மஸ்க் டுவிட்டரில் தெரிவித்திருந்தார். இதன்படி தனது ஆடம்பர மாளிகைகள் அனைத்தையும் விற்க டெஸ்லா சிஇஓ திட்டமிட்டார். இந்த வகையில் தான் தற்போது சான் பிரான்ஸிஸ்கோவில் 47 ஏக்கரில் 16,000 சதுர அடியில் அமைத்துள்ள இந்த கடைசி மாளிகை வீட்டையும் எலான் விற்றுள்ளார்.
10 படுக்கை அறைகள், 10 குளியலறைகளை கொண்ட இந்த ஆடம்பர மாளிகையில் பால்ரூம், விருந்து அறை, நீச்சல் குளம் மற்றும் வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கு கேரேஜும் உள்ளது. எலான் மஸ்க் இந்த வீட்டை 2017ல் 23.3 மில்லியன் டாலர்களுக்கு வாங்கினார். இந்த மாளிகையை சொந்த பயன்பாட்டை காட்டிலும் அதிகளவில் வெளி நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கே எலான் மஸ்க் கொடுத்தார் என செய்திகள் கூறுகின்றன.
இந்த ஆடம்பர மாளிகையை விற்பது குறித்த டுவிட்டர் பதிவில், இந்த மிக பெரிய இடத்தை மிக பெரிய குடும்பத்தினர் வாங்கி குடியேறினால் நன்றாக இருக்கும் எலான் மஸ்க் தனது ஆசையை தெரிவித்துள்ளார். தற்சமயம் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் டெக்ஸாஸில் உள்ள அவரது விண்வெளி ஆய்வு தொழிற்கூடத்திற்கு அருகில் வசித்து வருகிறார்.
இதற்கு மத்தியில் கடந்த ஆண்டில் ராக்கெட் தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றினை இவர் 50,000 டாலர்களுக்கு வாடகைக்கு எடுத்து பயன்படுத்தி வருகிறார். தற்போது தனது கடைசி ஆடம்பர வீட்டையும் விற்றுள்ள எலான் மஸ்க் 2020ல் இருந்தே அவரது சொத்துகளை விற்க ஆரம்பித்துவிட்டார். முதலாவதாக தனது இரு பெல் ஏர் சொத்துகளை எலான் விற்பனை செய்தார்.
அதன்பின் லாஸ் ஏஞ்சல்ஸில் 62.5 மில்லியன் டாலர்கள் மதிப்பில் உள்ள நான்கு சொத்துகளை எலான் விற்றார். இதில் ஒரு வீட்டை முன்னணி ஹாலிவுட் நடிகர் ஜீன் வைல்டரின் இருந்து வாங்கினார். 1971ல் வெளிவந்த அமெரிக்க படம் ஒன்றில் இந்த வீடு இடம் பெற்றிருந்தது. இந்நிலையில் மஸ்க் தனது செல்வத்தை பற்றிய விமர்சனங்களை குறைக்கவே இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக இங்கிலாந்து ஊடகங்கள் தெரிவிக்கின்றன.