சினிமா

‘நடிக்க வேண்டாம்னு நிறைய பேர் சொன்னாங்க’. சாண்டி மாஸ்டர்.

57views

பிக்பாஸ் பிரபலம் சாண்டி மாஸ்டர் ‘3:33’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.

தனது திரையுலகில் நடன இயக்குனராக வலம் வரும் சாண்டி மாஸ்டர் பிக்பாஸ்-3 நிகழ்ச்சி மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தார். தற்போது இவர் நம்பிக்கை சந்துரு இயக்கத்தில் உருவாகியுள்ள 3:33 படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஜீவிதா கிஷோர் தயாரித்துள்ள இந்த படத்தில் கௌதம் மேனன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் வருகிற அக்டோபர் 21-ஆம் தேதி இந்த படம் தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தை விளம்பரப்படுத்த படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்துள்ளனர்.

அப்போது பேசிய சாண்டி, ‘3:33 நடிகராக எனது முதல் படம். பிக்பாஸில் இருந்து வெளியே வந்தபின் ஏதாவது சீரியஸாக செய்யலாமே என நினைத்துக் கொண்டிருந்தேன். அப்போது சந்துரு கதை சொல்கிறேன் என்றார். அவர் கதை கூறும் போது அந்த இடத்தை ரணகளமாக்கி நடித்து கதை சொன்னார். இந்த படத்தின் உண்மையான நாயகன் அவர்தான். அவர் நடித்துக் காட்டியதில் 50% தான் நான் செய்துள்ளேன். அவருக்குள்ளும் ஒரு நடிகர் இருக்கிறார். ஒரு வீட்டுக்குள்ளேயே வைத்து படத்தை மிக அருமையாக எடுத்துவிட்டார்கள். நான் நடிக்கிறேன் என சொன்னபோது, நீங்கள் கோரியோகிராபி மட்டும் செய்யுங்கள், நடிக்க வேண்டாம் என நிறைய பேர் சொன்னார்கள். எனக்கு லாரன்ஸ் மாஸ்டர், பிரபுதேவா மாஸ்டர் போல் வர வேண்டும் என ஆசை’ என்று கூறியுள்ளார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!