‘ஃபிட் இந்தியா’ இயக்கத்தின் 2-ம் ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் தேசிய விளையாட்டு தினமான நேற்று டெல்லியில் உள்ள மேஜர் தயான் சந்த் தேசிய விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ‘ஃபிட் இந்தியா’ கைபேசி செயலியை மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து அவர் பேசியபோது, ”ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தயான் சந்த் பிறந்தநாளை கொண்டாடும் தேசிய விளையாட்டு தினத்தன்று இந்திய மக்களுக்கு இந்த செயலி அரசாங்கத்தின் பரிசாகும். விளையாட்டு வீரர்கள் உடற்தகுதியாக இருக்க இந்த செயலி அவசியம்” என்றார்.
இந்த விழாவில் காணொலி வாயிலாக பங்கேற்ற இந்திய ஹாக்கி அணி கேப்டன் மன்பிரீத் சிங் கூறும்போது, ‘உடற்தகுதிக்கு நாம் போதுமான முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இந்த செயலிவேடிக்கையாகவும், இலவசமாகவும் உள்ளது. எவரும் தங்கள் உடற்தகுதியை எங்கும் சோதித்து கண்காணிக்க முடியும். இந்த செயலி மிகவும் உதவிகரமாக உள்ளது. பயன்படுத்தவும் எளிதாகஉள்ளது. மேலும் இது என்உடற்தகுதியை மேம்படுத்தஉதவும்” என்றார்.