விளையாட்டு

தேசிய கூடைப்பந்து போட்டி: தமிழக அணி சாம்பியன்

75views

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடந்த, தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில், ஆண்கள் பிரிவில் தமிழக அணி முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றது.இந்திய கூடைப்பந்து கூட்டமைப்பு ஆதரவுடன், தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் சார்பில், 71வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள், சென்னை பெரியமேட்டில் உள்ள, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது.

இதில், இந்திய அளவில் முன்னணி அணிகளாக இந்திய ரயில்வே அணி, சர்வீசஸ் அணி உட்பட தமிழகம், பஞ்சாப், கேளரா, கர்நாடகா, அசாம், டில்லி, உ.பி., – ராஜஸ்தான், ஹரியானா, மிசோராம், ஓடிசா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட 31 மாநில அணிகள் பங்கேற்றன.நேற்று முன்தினம் மாலை நடந்த இறுதிப் போட்டியில், ஆண்கள் -பிரிவில், தமிழக மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. விறுவிறுப்பான ஆடத்தின் முடிவில், தமிழக அணி, 87 – 69 என்ற புள்ளிக் கணக்கில், முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றது. தமிழக அணி வீரர்கள் அரவிந்த் குமார், ஜீவானந்தம், அரவிந்த் மற்றும் முயின் பெக் உள்ளிட்டோர் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர்.

அதேபோல், பெண்கள் பிரிவு போட்டியில், இந்தியன் ரயில்வே மற்றும் தெலுங்கானா அணிகள் மோதின. விறுவிறுப்பான போட்டியில், இந்தியன் ரயில்வே அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, அதிகப்படியாக 131 – 82 புள்ளிக் கணக்கில் முதலிடம் பிடித்தது.போட்டியில் முதலிடங்களை வென்ற, தமிழக அணி மற்றும் இந்தியன் ரயில்வே அணிகளுக்கு, கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!