இந்தியா

தேசிய அளவில் பு।திய கூட்டணி உருவாக்க சந்திரசேகர ராவ் தீவிரம்

75views

பா.ஜ.,வுக்கு எதிராக காங்கிரஸ் அல்லாத மாற்று அணியை உருவாக்கும் முயற்சியின் அடுத்த கட்டமாக, மஹாராஷ்டிரா முதல்வரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரேவை, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், மும்பையில் வரும் ௨௦ம் தேதி சந்திக்கிறார்.லோக்சபாவுக்கு, 2024ல் தேர்தல் நடக்க உள்ளது.

முயற்சிபா.ஜ.,வுக்கு எதிராக காங்கிரஸ், இடதுசாரிகள் அல்லாத கூட்டணியை உருவாக்கும் முயற்சியில், மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி முயற்சித்து வருகிறார். உத்தர பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் முடிந்த பின், எதிர்க்கட்சிகளை சேர்ந்த முதல்வர்களை ஒருங்கிணைத்து கூட்டம் ஒன்றை நடத்த, அவர் திட்டமிட்டுள்ளார், இந்நிலையில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், சமீபகாலமாக பா.ஜ.,வையும், மத்திய அரசையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். அவரும் பா.ஜ.,வுக்கு எதிராக காங்கிரஸ் அல்லாத கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்கிடையே, முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி தலைவருமான தேவ கவுடா, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை நேற்று முன்தினம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இது குறித்து பேசியிருக்கிறார்.புதிய கூட்டணி அமைக்கும் முயற்சியின் அடுத்த கட்டமாக, மஹாராஷ்டிரா முதல்வரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரேவை, சந்திர சேகர ராவ், மும்பையில் ௨௦ம் தேதி சந்திக்க உள்ளார்.

இது பற்றி தெலுங்கானா முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:முதல்வர் சந்திரசேகர ராவை, மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அழைப்புஅப்போது, நாட்டின் கூட்டாட்சி அமைப்பை காப்பாற்றுவதற்காக, சந்திரசேகர ராவ் முன்னெடுக்கும் நடவடிக்கை களை முழுமையாக ஆதரிப்பதாக தெரிவித்த உத்தவ் தாக்கரே, மும்பைக்கு வருமாறு ராவுக்கு அழைப்பு விடுத்தார். உத்தவ் தாக்கரேவின் அழைப்பின் பேரில், சந்திர சேகர ராவ் மும்பைக்கு 20 தேதி செல்கிறார். அங்கு உத்தவ் தாக்கரேவை சந்தித்து, பா.ஜ.,வுக்கு எதிரான கூட்டணி அமைப்பது பற்றி பேசுகிறார்.இவ்வாறு அந்த அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!